காயலான் கடைக்கு கொண்டு செல்லப்பட்ட விமானம்! எதிரே வந்த பாலம்! பிறகு அரங்கேறிய பரிதாபம்!

விமானத்தை காய்லாங்கடைக்கு ஏற்றிச்சென்ற லாரியால் மேற்குவங்க மாநிலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


இந்திய ஆர்லெய்ன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது போயிங் விமானம். இந்த விமானம் செயல்படாததால் அந்த நிறுவனத்தால் கைவிடப்பட்டது. இந்நிலையில் இந்த விமானத்தை பழைய பொருட்கள் வாங்கும் வியாபாரி ஒருவர் வாங்கியுள்ளார்.

இதனை ஒரு லாரியில் ஏற்றி சென்றனர். அப்போது எதிர்பாராவிதமாக அந்த லாரியானது மேம்பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்டது. இதனால் நெடுநேரமாக அப்பகுதி வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செய்வது தெரியாமல் அனைவரும் திகைத்திருந்தனர்.

அப்போது அங்கு வந்த மீட்பு படையினர், லாரியின் நடுப்பக்க டயர்களை கழற்றி எடுத்தனர். மேலும் முன்பக்கத்தை கயிறு கட்டி மற்றொரு லாரியுடன் இணைத்துக்கொண்டு வெளியே இழுத்தனர். நீண்ட சிரமத்திற்குப் பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்பட்டது.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.