பெண்களுக்கு எதிரான குற்றத்தை தடுப்பதற்காக பிங்க் நிற வண்டி அறிமுகப்படுத்தபோவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
பெண்களைக் காப்பாற்ற வந்தாச்சு பிங்க் நிற கார்கள்! எப்படி தெரியுமா?
நம் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடைப்பெற்று வருகின்றன. காவல்துறையினர் குற்றங்களை தடுப்பதற்காக பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது. தற்போது தமிழக அரசானது மேலும் ஒரு முறையை அறிமுகப்படுத்த போகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுப்பதற்காக மாவட்டத்திற்கு தனி காவல்துறையும், மகளிர் காவல்துறையும் இணைந்து செயல்பட உள்ளனர். இதே போன்று பிங்க் நிற கார்கள் தற்போது அறிமுகப்படுத்தபட உள்ளது.
தமிழக முழுவதும் இதுபோன்ற கார்கள் ரோந்து பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட பணியில் சென்னையில் 35 கார்கள் ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திட்டத்தை மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திட்டத்திற்கு ஏடிஜிபி ரவி தலைமை தாங்க உள்ளார். மேலும் இதே திட்டமானது கேரளா மாநிலத்தில் வெற்றியடைந்தை அனைவரும் அறிவர்.
இந்தத் திட்டமானது தமிழகத்திலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.