பேன்ட் பாக்கெட்டில் இருந்த மொபைல் போன்! திடீரென வெடித்த பயங்கரம்! இளைஞருக்கு நேர்ந்த கதி!

மும்பையில் ஒரு இளைஞரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்ஃபோன் வெடித்துச் சிதறிய அதிர்ச்சிக் காட்சிகள் வெளியாகியுள்ளன.


தற்காலத்தில் பல்வேறு பிராண்டு செல்ஃபோன்கள் சார்ஜ் செய்யும்போதும், பயன்படுத்தும் போதும் என பல்வேறு தருணங்களில் வெடித்துச் சிதறுவதும், அதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றும் தங்கள் தயாரிப்பு பத்தரை மாற்றுத் தங்கம் என்றும் தொடர்புடைய்ய நிறுவனங்கள் சப்பைக்கட்டு கட்டி தங்களுக்குத் தாங்களே சான்றிதழ் கொடுத்துக் கொள்வதும் வியாபார யுகம் என்ற பெயரிலான ஏமாற்று யுகத்தில் வழக்கமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்கள் தான்

இந்நிலையில் மும்பையின் சாகா என்ற இடத்தில் ஒரு தொழிற்பேட்டையில் அமைதியாக அமர்ந்திருந்த ஒரு இளைஞரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்ஃபோன் திடீரென தீப்பிடித்து வெடித்துச் சிதறியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், எரிந்து கொண்டிருந்த செல்போனை பாக்கெட்டில் இருந்து எடுத்து வீசிவிட்டு ஒடினார்.

அதற்குள் அவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டதால் அவர் துடித்த காட்சிகளும் அங்கிருந்த சி.சி.டி.வி காட்சிகளில் பதிவாகியுள்ளன. அந்தக் காட்சிகள் இணையதளத்தில் வைரலாகியுள்ளன். 

இதற்குமுன் ராஜஸ்தான் மாநிலத்தில் முதியவர் ஒருவர் தன் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்த அதிர்ச்சியில் உயிரிழந்த நிலையில் மீண்டும் இளைஞர் ஒருவரின் பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென வெடித்த சம்பவம் செல்ஃபோன் பயனாளர்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் இளைஞரின் பேன்ட் பாக்கெட்டில் இருந்த போது வெடித்த காரணத்தினால் இளைஞரின் அந்த உறுப்புக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் மருத்துவ சோதனையில் அவர் நலமாக இருப்பது தெரியவந்தது.