பேட்ட படத்தின் இரண்டாம் சிங்கிள் ட்ராக் டிசம்பர் 7 முதல்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் பேட்ட படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் டிசம்பர்7 (நாளை) வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


'ஊலல்லலா' என தொடங்கும் இந்த பாடல் நாளை வெளியிடவுள்ளதாக சன்பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. அனிருத் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார் . ஏற்கனவே வெளியான முதல் சிங்கிள் ட்ராக்- மரண மாஸ் பாடல் இணையத்தளத்தில் பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரை இந்த பாடல் மில்லியன் பார்வையாளர்களால் கண்டுகளிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு வெளிவந்த பேட்ட படத்தின் விஜய் சேதுபதியின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது