கோவை பெட்ரோல் பங்க் பெண் ஊழியர்கள் உடை மாற்றும் அறையில் கேமரா..! பகீர் வழக்கில் புதிய திருப்பம்!

பெட்ரோல் பங்கில் பெண்கள் உடைமாற்றுவதை வீடியோ எடுத்த 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ள சம்பவமானது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோயம்புத்தூரிலுள்ள சாய்பாபா காலனியில் இயங்கிவந்த பெட்ரோல் பங்கில் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நிறைய பெண் ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். பெண்கள் பெட்ரோல் பங்கிற்கு வந்தவுடன், உடைமாற்றும் அறைக்கு சென்று பெட்ரோல் பங்க் உடையை அணிந்து கொள்வர். இந்த பங்கில் வேலை பார்க்கும் ஆண் ஊழியர் ஒருவர் தினமும் காலையில் அந்த அறைக்கு சென்று தன்னுடைய செல்போனை மறைவிடத்தில் வைத்து ஆன் செய்து விடுகிறார்.

பெண்கள் உடை மாற்றும் போது அவர்களுடைய அந்தரங்க காட்சிகள் செல்போனில் பதிவாகின்றன. இதுபோன்று கிட்டத்தட்ட 5 பெண்களின் வீடியோக்கள் அந்த ஆண் ஒருவரின் செல்போனில் பதிவாகியுள்ளன.

நீண்ட நாட்களாக இந்த சம்பவம் அரங்கேறி வந்த நிலையில், காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. விசாரணை நடத்தியதில் ஊழியர்களான சுபாஷ் மற்றும் மணிகண்டன் தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கண்டறிந்தனர். 

மேலும் இவர்கள் இருவரும் மருதாசலம் என்ற போலி பத்திரிகையாளர்களிடம் இந்த வீடியோக்களை கொடுத்ததாக கூறியுள்ளனர். உடனடியாக காவல்துறையினர் மருதாச்சலத்தையும் கைது செய்தனர். 3 பேரையும் மத்திய கோவை சிறையில் காவல்துறையினர் அடைத்தனர். 

தற்போது அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சம்பவமானது கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.