நடிகை வனிதாவிற்கும் பீட்டர் பால் என்பவருக்கும் நேற்றைய தினம் திருமணம் நடைபெற்ற நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி அவரைப் பற்றி பல ரகசியங்களை தற்போது உடைத்தெறிந்து இருக்கிறார்.
வனிதாவின் 3வது கணவர் பீட்டருக்கு காலேஜ் போகும் மகன்! வயதுக்கு வந்த மகள்! முதல் மனைவி உடைக்கும் ரகசியம்!
இந்நிலையில் நடிகை வனிதா நேற்றைய தினம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் பீட்டர் பாலை மூன்றாவதாக திருமணம் செய்து இருக்கிறார். இந்நிலையில் பீட்டர் பாலிரன் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தன்னிடமிருந்து முறையாக விவாகரத்து பெறாமலேயே நடிகை வனிதாவை தனது கணவர் திருமணம் செய்து கொண்டிருப்பதாக வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதிலும் இந்த புகாரானது கடந்த 10 நாட்களுக்கு முன்பாகவே காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி அவர் வனிதாவை திருமணம் செய்து கொண்டதை பற்றியும் தன்னுடைய குடும்பத்தை பற்றியும் மனம்திறந்து கூறியிருக்கிறார். அதாவது பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து விட்டு சாலிகிராமத்தில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். எலிசபெத் பீட்டரின் உறவினர் ஆவார். இதனால் உறவினரான பீட்டரை, எலிசபெத்திற்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு கல்லூரி படிக்கும் ஒரு மகனும் வயதுக்கு வந்த ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு மனகசப்பு உருவாக்கியிருக்கிறது.
பொதுவாகவே இந்த சண்டைக்கு காரணம் பீட்டர் பாலின் குடிப்பழக்கம் தான் என்று அவரது முதல் மனைவி எலிசபெத் கூறுகிறார் . இதனால் இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் அடிக்கடி பீட்டர் பால் வீட்டைவிட்டு சென்று விடுவாராம். இருப்பினும் அவ்வபோது வந்து தன்னுடைய குழந்தைகளை பார்த்துக் கொள்வார் என்றும் எலிசபெத் கூறியிருக்கிறார். இந்த நிலையில்தான் எலிசபெத்தை விட்டு பீட்டர் நிரந்தரமாக விவாகரத்து பெற்று பிரியாமல் தன்னுடைய குழந்தைகளை கவனித்து வந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில்தான் திடீரென்று பீட்டரும் வனிதாவை திருமணம் செய்து கொள்வதைப் பற்றி எலிசபெத்துக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து எலிசபத் கூறுகையில் வனிதாவுக்கும் எனது கணவருக்கும் இடையே எப்படி பழக்கம் ஏற்பட்டது என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. அது மட்டுமில்லாமல் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக கூறிய தகவல் எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றும் எலிசபெத் கூறியிருக்கிறார்.
இதனையடுத்து தான் கடந்த 19ஆம் தேதி அவர் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று தன் கணவர் மீது புகார் அளித்திருக்கிறார். அப்போது போலீஸ் அதிகாரிகள் பீட்டரை அழைத்து விசாரித்துள்ளனர். விசாரணையில் பீட்டர் நான் வனிதாவை திருமணம் செய்து கொள்ள போவது உண்மைதான் ஆனால் முதல் மனைவியிடமிருந்து முறையாக விவாகரத்து பெற்றுக் கொண்ட பின்புதான் வனிதாவை திருமணம் செய்து கொள்வேன் என்றும் ஒருவேளை அப்படி நடந்தால் சட்ட ரீதியாக நீங்கள் என் மீது நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் என்றும் போலீசார் முன்னிலையில் எழுதி கொடுத்திருக்கிறாராம். அவ்வாறிருக்க திடீரென்று இவர்கள் இருவரும் அவசரகதியில் திருமணம் செய்து கொண்டிருப்பது எங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .
மேலும் பேசிய எலிசபெத், எனக்கு பீட்டர் பாலை விவாகரத்துச் செய்வதில் விருப்பமில்லை எனவும் அவருடன் சேர்ந்து வாழ ஆசை பட்டதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் என்னுடைய கணவர் பீட்டர் பால் வனிதாவின் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு விவாகரத்து செய்ய முடிவெடுத்ததாக எலிசபெத் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் வனிதாவும் பீட்டர் பாலும் இணைந்து தன்னை மிரட்டுவதாகவும் மீண்டும் விட்டு அவருடன் ஒன்றாக இணைந்து வாழவேண்டும் கூறியமையால் பலவிதங்களில் அழுத்தங்களை தருவதாகவும் எலிசபெத் கூறியிருக்கிறார். பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் வெளியிட்டுள்ள இந்த தகவல்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.