அசுர வேகத்தில் திரும்பிய பேருந்து! சடன் பிரேக் போட்ட டூ’வீலர்! பிறகு நேர்ந்த அதிசயம்! வைரல் வீடியோ!

இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி சாலை விபத்தில் சிக்கினாலும், பேருந்து இடிப்பாடிலிருந்து தப்பித்த சம்பவமானது வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு எனும் பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியிலிருந்து தம்பதியினர்  தஞ்சைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். பள்ளியகிரஹாரம் பகுதிக்கு அருகே அதிவேகமாக சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராவிதமாக எதிரே தனியார் பேருந்து ஒன்று விரைந்து வந்து கொண்டிருந்தது. 

அப்போது திருவையாறை நேக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்து. அந்த அரசுப் பேருந்துக்கு பின்புறம் தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. பேருந்து இடதுபுறம் வளைய வேண்டிய நிலையில் ஓட்டுனர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பேருந்தை இடதுபுறம் வளைத்தள்ளார்.

அப்போது தம்பதியினர் எதிர்திசையில் தஞ்சையை நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிரே பேருந்து வருவதை கவனித்துள்ளனர். உடனடியாக கணவன் இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளார்.இதனால் முன்பிரேக்கை பிடிக்க வாகனம் வழுக்கியது. இதனால் தூக்கி வீசப்பட்ட பெண் வேகமாக சாலையில் தேய்த்தபடியே சென்று கொண்டிருந்தார்.

இதனை பார்த்து இடதுபுறம் வேகமாக வளைந்த பேருந்தின் ஓட்டுனர் சடன் பிரேக் போட்டார். அதிஷ்டவசமாக பேருந்து அப்படியே நிற்க அதன் மீது மனைவி மோதி விழுந்தார். நல்ல வேளையாக பேருந்து அவர் மீது ஏறவில்லை. லேசான காயத்துடன் அவர் உயிர் தப்பினார். 

அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் இந்த காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சாலை விதிகளை மதிக்க வேண்டும் என்பதை இந்த விபத்து ஆழமாக உணர்த்துகிறது. 

https://www.youtube.com/watch?v=Ut1MAsZLHSQ