ஓட்டு போட ஸ்மார்ட்போன் இருந்தால் போதும்.. தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி அறிவிப்பு..!

டெல்லியில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் ஸ்மார்ட் போனை பயன்படுத்தி கூட வாக்களிக்கலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி ரன்பீர் சிங் கூறியுள்ளார்.


டெல்லியில் வரும் பிப்ரவரி எட்டாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு மொத்தம் 70 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் வாக்காளர்கள் தங்கள் வாக்கை அளிக்கச் செல்லும் பொழுது ஒருவேளை தங்களுடைய வாக்காளர் சீட்டை மறந்து விட்டு சென்றால் இனிமேல் கவலை வேண்டாம். ஏனெனில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் எளிமையான முறையில் வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்யலாம். 

இந்த முறை முதன்முதலாக டெல்லியில் நடைபெறப் போகிற சட்டசபை தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. க்யூஆர் கோட் வசதியை பயன்படுத்தி வாக்களிக்கும் புதிய வசதி டெல்லியில் மொத்தம் உள்ள 11 மாவட்டங்களில் தலா ஒரு சட்டசபை தொகுதி வீதம் 11 தொகுதிகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது. 

அவ்வாறாக வாக்காளர்கள், வாக்காளர் உதவி மைய செயலியில் இருந்து ‘க்யூஆர்’ கோட்-ஐ முதலில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஓட்டு போடும் இடத்தில் க்யூஆர்’ கோட்-ஐ ஸ்கேன் செய்ய வேண்டும். இதனையடுத்து வாக்காளர்கள் தங்களுடைய செல்போன்களை அருகில் இருக்கும் இடத்தில் வைத்துவிட்டு நாங்கள் விரும்பும் சின்னத்தில் ஓட்டு போட்டுக் கொள்ளலாம் என்று டெல்லியில் பத்திரிகையாளரிடம் தேர்தல் தலைமை அதிகாரி ரன்பீர் சிங் கூறியிருக்கிறார்