கடவுள் இருக்கிறார்! இந்த அதிசயம் நிறைந்த ஊரே சாட்சி

கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையில் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பேரூர் என்னும் பாடல்பெற்ற ஸ்தலம்.


நால்வரால் பாடல்பெற்ற இவ்வாலயம் மேல சிதம்பரம் என் றும் அழைக்கப்படுகிறது. இங்கு நடராஜப் பெருமான் ஆனந்த தாண்டவம் ஆடியபோது அவர் காலில் அணிந்திருந்த சிலம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இக்கோவிலில் ஐந்து அதிசயங்கள் எது என்றால், இறவாத பனை, பிறவாத புளி, புழுக்காத சாணம், எலும்பு கல்லாவது, வலதுகாதுமேல் நோக்கிய நிலையில் இறப்பது. இதுதான் அந்த அதிசயங்கள்.

இறவாத பனை

பல ஆண்டுகாலமாக இன்றும் பசு மைமாறாமல் இளமையாகவே ஒரு பனைமரம் நின்று கொண்டிரு க்கிறது. இந்த மரத்திற்கு இறப்பென்று எப்போதுமே கிடையாதாம். இந்த பனை மரத்தின் பட்டையை இடி த்துக் கஷாயம் போட்டுக் குடித்தா ல், தீராத வியாதியெல்லாம் தீரும் என்கிறார்கள். இது தான் இறவாத பனை

பிறவாத புளி

அடுத்து பிறவாதபுளி, என்றுபோற்றப்படும் புளியமரம் இங்கு இருக்கிறது. இந்த புளியமரத்தின் கொட்டைகள் மீண்டும் முளைப்பதேயில்லையாம். புளியம்பழத்தின் கொட்டைகளை மீண்டும் முளை க்க வைப்பதற்காக வெளிநாட்டிலி ருந்து வந்த விஞ்ஞானிகள் பலரும் எவ்வளவோ முயற்சி செய்து பார் த்து விட்டார்கள். ஆனால் மரம் முளைக்கவே இல்லை. இந்த புளியமரம் இந்த பிறவி மட்டுமே என்று வரம் வாங்கி வந்து ள்ளதாம். அதனால் பிறவாத புளி என்று அழைக்கிறார்கள்.

புழுக்காத சாணம்

மூன்றாவதாக புழுக்காத சாணம், கோயில் இருக்கிற பேரூர் எல்லைக் குட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு போன்ற கால் நடைகளின் சாணம் மண் ணில் கிடந்தால் எத்தனை நாட்கள் ஆனாலும் அவற்றிலிருந்து புழுக்கள் உண்டாவதே இல்லையாம்.

மனித எலும்புகள் கல்லாவது

இங்குள்ளவர்களில் யாரேனும் இறந்து விட்டால் அந்த உடலை எரித்தப் பிறகு மிச்சமாகும் எலும்புகளை ந்த ஆத்மா புண்ணியம் பெற வேண்டும் என்பதற்காக இங்குள்ள நொய்யால் ஆற்றில் விடுவார்களாம். அப்படி ஆற்றில் விடப்படுகிற எலும்புகள் சிறிது காலத்தில் கற்களாக உருமாறி கண்டெடுக்கப்படுகிறதாம்.

வலது காதை மேல் நோக்கி வைத்தபடி மரணிப்பது.

ஐந்தாவதாக பேரூரில் மர ணமடையும் மனிதன் முதல் அனைத்து ஜீவராசிகளும் இறக்கும் தருவாயில் தமது வலது காதை மேல் நோக்கி வைத்த படிதான் மர ணம் அடைகின்ற அதிசயமும் இங்கு இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

இந்த அதிசயங்களை நடத்திக் கொண்டிருக்கின்ற பட்டீஸ்வரர், இங்கு அமைதியாகத் தான் காட்சித்தருகிறார். ஆனால் இவரின் வரலாறு நமக்கு ஆச்சரியத்தைத் தருகின்றது. முன்பு இக் கோயில் இருந்த இடம் அரச மரங்கள் நிறைந்த காடாக இருந்ததாம். அப் போது பல பசுமாடுகள் ங்கு வந்து மேய்ந்து கொ ண்டிருக்கும் அதில் ஒரு மாடு மட்டும் அருகிலுள்ள பாம்பு புற் றின் மீது பாலை சொறியுமாம். இதைப்பார்த்த ஒரு வன் மற்றவர்களிடம் சொல்ல அவர்கள் அந்த இடத்தைத் தோண்டும்போது கிடைத்தவர்தான் நமது பட்டீஸ்வரர்.

கிடைக்கும்போதும் அதிசயத்துடன் கிடைத்தவர் இவர். இவரின் திருமேனியில் தலையில் ஐந்து தலைப்பாம்பு படமெடுத்த நிலை, மார்பில் பாம்பின் பூணூல், தலையில் அழகழகாய் சடைக்கொத்துக்கள், சடைகளுக் கு அரணாய் இருப்பதுபோல் கங்கை, அன்னமும், பன்றியுமாய் பிரம்மா, விஷ்ணு அடிமுடி தேடிய அடையாளங்கள் இவைகளோடு பட்டீஸ்வரர் தலையில் மாட்டின் கால் குளம்புகள் மூன்றும், கொம்பு முட்டிய தழும்பும் காணப்படுகின்றன

இதையெல்லாம் பார்த்த மக்கள் பரவசத்துடன் வழிபட ஆர ம்பித்திருக்கிறார்கள்.