எம்.ஆர்.ஐ கருவிக்குள் நோயாளியை அனுப்பியதை மருத்துவர்கள் மறந்த சம்பவமானது ஹரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
MRI ஸ்கேன் மெசினுக்குள் சிக்கிய நோயாளி! பிறகு நேர்ந்த பரிதாபம்! பிரபல மருத்துவமனையில் விபரீதம்!
ஹரியானா மாவட்டத்தில் பஞ்ச்குலா என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு ரம்ஹார் லோஹன் என்பவர் வசித்துவருகிறார். இவருடைய வயது 59. சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த சாலை விபத்தில் இவருடைய தோள்பட்டை சரிந்தது. இதனால் பஞ்ச்குலாவிலுள்ள மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவர்கள் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க அறிவுறுத்திதனர்.
இவருக்கு லலித் கௌஷல் என்ற மருத்துவர் மருத்துவம் பார்த்தார். நேற்று முன்தினம் காலையில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்குமாறு மருத்துவர் கூறியுள்ளார். மருத்துவத்தில் பணியாற்றும் ஒருவர் அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்தார். 10 முதல் 15 நிமிடங்கள் ஆகும் என்று அவர் ரம்ஹாரிடம் கூறியுள்ளார். ஆனால் 30 நிமிடங்களாகியும் ரம்ஹார் வெளிவரவில்லை. வெப்பம் அதிகரித்தால் மூச்சு விடுவதற்கு அவர் மிகவும் சிரமப்பட்டுள்ளார்.
எழுந்து வெளிவருவதற்கு முயற்சித்த போது அவர் கைகள் கட்டப்பட்டு இருந்ததை உணர்ந்தார். ஒரு கட்டத்தில் உயிர் இறந்து விடுவோம் என்ற பயத்தில் அவர் அந்த கருவியை உடைத்து வெளியே வந்தார். உடனடியாக மருத்துவமனையில் இருந்து வெளியேறிய அவர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். மேலும் சிசிடிவி கேமரா பதிவுகளையும் மருத்துவமனையிலிருந்து கேட்டுள்ளார்.
எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவிகளை இயக்கும் அமித் கோக்கர் கூறுகையில், "ரம்ஹார் 20 நிமிட சோதனைக்கு உட்பட்டிருந்தார்" என்று கூறினார் இந்த சம்பவமானது ஹரியானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.