இளம் பெண் உள் ஆடைக்குள் பொக்கிஷம்! கண்டுபிடித்து அசந்த அதிகாரிகள்! விமான நிலையத்தில் சம்பவம்!

இலங்கையிலுள்ள கொழும்புவில் இருந்து இந்தியாவிற்கு வந்த இரண்டு பயணிகளிடம் இருந்து ரூ.36¾  லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் சுங்கத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.


இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு பல லட்சம் மதிப்பு தக்க பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன என்று சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் கடும் சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். முழு விமான நிலையத்தையும் தங்களுடைய கண்காணிப்பில் கொண்டுவந்த சுங்க இலாகா அதிகாரிகள் கொழும்புவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த இலங்கையை சேர்ந்த சிவக்குமார் பழனியாண்டி(வயது 38 ) என்பவரை சோதனை செய்துள்ளனர்.

சிவக்குமார் மற்றும் அவரது உடைமைகள் சோதனைக்கு உட்படுத்தப்படும் போது , பல லட்சம் மதிப்பு தங்க நகைகளை கடத்தி கொண்டு வருகிறார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவரிடம் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட தங்க நகைகள் சுங்க இலாகா அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

சற்று நேரத்திற்கு பின்பு கொழும்புவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கபட்ட மற்றொரு விமானம் ஒன்றில் பயணம் செய்து வந்த இலங்கையை சேர்ந்த சகாயமேரி (வயது 35 ) என்ற பெண்மணி , தன்னுடைய துணிகளுக்கு இடையில் தங்க நகைகளை பதுக்கி வைத்துக் கொண்டு வந்துள்ளார்.

மேலும் அவரது உடமைகளையும் அவரையும் சோதித்த பொழுது அவருடைய உள்ளாடைகளில் மறைத்து வைக்கப்பட்ட தங்க கட்டிகளையும் சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும் அந்தப் பெண்ணிடம் இருந்து ரூ.17 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 448 கிராம் தங்கத்தை கைப்பற்றினர். இலங்கையிலிருந்து வந்த இரண்டு பேரிடமும் சேர்த்து ரூ.36 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 973 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் இந்த நகைகளை கொள்ளையடித்து வந்த இருவரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.