பேருந்தில் கேட்பாரற்று கிடந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பு கரன்சி! கண்டெடுத்த டிரைவர் செய்த நெகிழ வைத்த செயல்!

பேருந்தில் தவறி விட்டுச்சென்ற பணத்தை ஓட்டுநர் பத்திரமாக காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவமானது சவுதி அரேபியாவில் நெகிழ செய்துள்ளது.


சவுதி அரேபியா நாட்டில் அபிஷேக் கோவிந்தன் என்பவர் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் ஓட்டிச்சென்ற பேருந்தில் பயணி ஒருவர் தவறுதலாக தன்னுடைய பணப்பையை விட்டு சென்றுள்ளார். அந்த பணப்பையில் 20,000 திராம்ஸ் இருந்துள்ளன

பேருந்து பணிமனைக்கு சென்ற பிறகு கோவிந்தன் பேருந்து சோதித்துப் பார்த்துள்ளார். அப்போது பணப்பை அனாதையாக கிடந்தது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக அவர் காவல் நிலையத்திற்கு சென்று இந்த பணத்தை ஒப்படைத்தார். 

பணத்தின் உரிமையாளரை காவல்துறையினர் கண்டுபிடித்து, முறையான விசாரணைக்கு பிறகு பணத்தை ஒப்படைத்துள்ளனர். அதன்பிறகு நேர்மையான முறையில் பணத்தை பத்திரமாக கொண்டு வந்து கொடுத்த அபிஷேக கோவிந்தனுக்கு நேர்மையாளர் விருது அளித்து சிறப்பித்தனர். மேலும் ஒரு விருதும், சான்றிதழ் அளித்து அபிஷேக் கோவிந்தன் கவுரவிக்கப்பட்டார்.

இந்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பலர் அபிஷேக கோவிந்தனுக்கு சமூக வலைத்தளங்களின் மூலம் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.