பணம் இல்லை! தூக்கம் வரவில்லை! நெஞ்சு வலி! 30 வயது நடிகைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

பரினீதி சோப்ரா தன் வாழ்வில் சந்தித்த துன்பங்களையும் சோகங்களையும் மிகுந்த வேதனையுடன் வெளிப்படுத்தியுள்ளார்.


பரினீதி சோப்ரா பாலிவுட் சினிமாவில் நடிகை மற்றும் பாடகியாக பணிபுரிந்து வருகிறார். இவர் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை ஆவார். பரினீதி சோப்ராவும் தன்னுடைய அக்கா பிரியங்காவை போல் இந்தி சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்து வந்தார். 

ஆனால் கடந்த 2014ஆம் ஆண்டு அவர் எதிர்பாராத சரிவை தன்னுடைய திரைப்பட வாழ்வில்  சந்தித்தார். இந்தச் சரிவானது  அவருடைய வாழ்வில் ஒரு மிகப்பெரிய பின்னடைவை தந்தது என்று கூறியுள்ளார்.

திரைப்படத் துறையில் தான் சம்பாதித்த பணத்தை வைத்து ஒரு அழகிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார் பரினீதி சோப்ரா .  அந்த வீடு வாங்குவதற்காக தன்னிடமிருந்த பணத்தை மொத்தமாக முதலீடு செய்துள்ளார். இதற்குப் பின் அவருடைய மார்க்கெட் சரிய சரிய பரினீதி சோப்ராவின் வாழ்வில் மிகவும் சிக்கலாகி உள்ளது.

இதற்குப்பின் மிகவும் மனம் உடைந்த பரினீதி சோப்ரா , நண்பர்கள் உறவினர்கள் என எவருடனும்  பேசாமல்  தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். அந்தத் தனிமை பரினீதி சோப்ராவை மிகவும் பாதித்தது எனவும் அப்போது தான் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும்  நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும் கூறினார்.  

இந்த தனிமை பரினீதி சோப்ராக்கு மிகப்பெரிய  அனுபவத்தை தந்ததாகவும் கூறினார். இதனையடுத்து கடந்த 2014ஆம் ஆண்டு தான் பிரதி தன்னுடைய இனிய  வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார்.

இந்த சோக சம்பவத்திற்குப் பிறகு பரினீதி சோப்ரா  நடித்த திரைப்படம் தான் கோல்மால். இந்த திரைப்படம் அவருக்கு ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது என்று கூறலாம். தற்போது பிரணிதி பல திரைப் படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.