இன்று திருமணம்! ஆனால் முதல் நாள் இரவு காதலனுடன் மணப்பெண் செய்த விபரீத காரியம்! கதறும் பெற்றோர்!

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் வீட்டை விட்டு ஓடி காதலனை திருமணம் செய்து கொண்ட சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை புறநகர் பகுதியான மாதவரத்திற்கு உட்பட்ட சாஸ்திரி நகர் எனுமிடத்தில் மகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர்  அப்பகுதியில் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றிவருகிறார். இவருடைய மகளின் பெயர் மோனிகா. அதே பகுதியில் கார்த்திக் என்பவர் மெக்கானிக் ஆக பணிபுரிந்து வருகிறார். இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். 

ஆனால் இவர்களுடைய காதலுக்கு மோனிகாவின் பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை. உடனடியாக அவருக்கு நெல்லூரில் உள்ள உறவினருடன் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இன்று மோனிகாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

ஆனால் மோனிகா நேற்று தோழியின் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு ஓடி விட்டார். உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. விரக்தியில் மாதவரம் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.

காவல்துறையினர் தேடியதில் மோனிகாவும் கார்த்திக்கும் திருவேற்காடு கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். காவல்துறையினர் அவர்கள் இருவரையும் மாதவரம் காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர். இருவரும் மேஜர் என்பதால் இருவரது பெற்றோருக்கும் அறிவுரை கூறி காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவமானது மாதவரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.