நீ வயசுக்கு வந்துட்டியா? இந்த வீடியோவ பாரு..! மாணவிகளிடம் வக்கிர கேள்வி! சிக்கிய ஸ்கூல் கரஸ்பாண்டன்ட்!

பள்ளி மாணவிகளிடம் ஆபாச படம் காட்டு மிரட்டியுள்ள பள்ளி தாளாளரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவது ரத்தினபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரத்னபுரி என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு புதிய மரியன்னை என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் சிலர் இன்று பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர்.

சம்பவம் அறிந்த காவல்துறையினர் உடனடியாக பள்ளி வளாகத்திற்கு விரைந்துள்ளனர். காவல்துறையினர் மறியல் செய்த பெற்றோரிடம் விசாரணை நடத்தியதில், பள்ளி தாளாளரான ஆண்டனிராஜ் பள்ளியில் பயிலும் 9-ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகவும், மேலும் மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களை வற்புறுத்தி காண்பித்தாகவும் பெற்றோர் கூறியுள்ளனர்.

மாணவிகளிடம் வயதுக்கு வந்துட்டியா என்று கேட்பதுடன் சில ஆபாச வீடியோக்களையும் தாளாளர் காட்டியதாக கூறப்படுகிறது. ஆண்டணிராஜ் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் புகார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வளாகத்தில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.