12ம் வகுப்பு மாணவிக்கு தாய் செய்த விபரீத ஏற்பாடு! பிறகு அரங்கேறிய சோகம்! அதிர வைத்த சம்பவம்!

திருமண ஏற்பாடு செய்ததால் 12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரத்தில் திருமங்கலம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் பெரியம்மாள். இத்தம்பதியினருக்கு சரண்யா என்ற மகள் உள்ளார். பெருமங்கலம் அரசுப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

தேவேந்திரன் 5 வருடங்களுக்கு முன்னால் உயிரிழந்தார். சரண்யாவின் அண்ணன் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தார். அவர் வெளிநாட்டிற்கு செல்வதற்கு முன்பு சரண்யாவின் திருமணத்தை நடத்தி முடித்துவிட வேண்டும் என்று நினைத்தனர்.

இதனை அறிந்து கொண்ட சரண்யா தனக்கு அதிகம் படிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாக கூறி திருமணத்தை நிராகரித்தார். ஆனால் அவருடைய தாயார் வலுக்கட்டாயமாக இருந்ததால் வேறு வழியின்றி வயலுக்கு தெளிக்கப்படும் பூச்சி மருந்தினை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வாயில் நுரை தள்ளியவாறு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சரண்யாவை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.  

இதனுடைய தங்கள் மேல் உள்ள தவறை வெளியில் காட்டாமல் இருப்பதற்கு சரண்யாவின் தாய், வயிற்று வலி தாங்காமல் அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவத்தினை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.