உயிரோடு இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்! ஊரையே அதிர வைத்த தந்தை! ஏன் தெரியுமா?

வேறு சாதி இளைஞனை தன் மகள் காதலித்ததால், அவர் இறந்துவிட்டதாக கூறிதந்தை ஒருவர் ஊர் முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியது ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதிக்கு அருகேயுள்ள சூரப்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் என்ற இளைஞன். இவருக்கு இவராணி என்ற மனைவியும் அர்ச்சனா என்ற மகளும் உள்ளனர். அர்ச்சனா அதே பகுதியை சேர்ந்த வேறு சாதி இளைஞன் ஒருவனை காதலித்து வந்துள்ளார்.

விஷயமறிந்த அர்ச்சனாவின் பெற்றோர் அவரை வன்மையாகக் கண்டித்துள்ளனர் ஆனாலும் பெற்றோரின் கண்டிப்பை  மீறி அர்ச்சனா செயல்பட்டு வந்துள்ளார். கண்டிப்பிற்கு பின்பும் அந்த இளைஞனுடன் உல்லாசமாக திரிந்து வந்துள்ளார். இதற்கிடையே திடீரென்று ஒருநாள் அர்ச்சனா வீட்டை விட்டு வெளியேறி, அதே இளைஞனுடன் ரகசிய திருமணம் செய்து கொண்டார். திருமண கோலத்தில் ஆம்பூர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார்.

பெற்றோர் இவ்வளவு எதிர்த்ததை மீறியும், அர்ச்சனா திருமணம் செய்து கொண்டதால் இவராணி  மற்றும் சரவணன் ஆத்திரமடைந்தனர். ஆத்திரத்தில் ஊர் முழுவதும் தங்கள் மகள் இறந்து விட்டதாக கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்துள்ளனர். அதாவது "எங்கள் மகள் 9-ஆம் தேதி மதியம் 2 மணிக்கு இறந்துவிட்டாள்.  10- ஆம் தேதியன்று காலையில் மகளின் பூவுடல் குப்புராஜபாளைய சுடுகாட்டில் எரிக்கப்படும்" என்று கண்ணீரஞ்சலி போஸ்டர் அடித்துள்ளார்.

உயிருடன்இருக்கும் மகளுக்கு, பெற்றோரே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.