இரவு விருந்துக்கு வீட்டுக்கு வந்த நண்பனால் இளம் தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்! 7 வயது மகன் முன்னிலையில் அரங்கேறிய பயங்கரம்!

7 வயது குழந்தையின் முன் பெற்றோர் கொல்லப்பட்ட சம்பவமானது உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்திரப்பிரதேச மாநிலத்தில் எடாவா என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கு விக்ரம் சிங் என்ற 35 வயது இளைஞர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் ஜோதி. இவருடைய வயது 32.இத்தம்பதியினருக்கு 7 வயது மகன் உள்ளார். 

வேலை நிமித்தமாக ஹரியானா மாநிலத்திலுள்ள குருகிராமுக்கு குடும்பத்தினருடன் இடம்பெயர்ந்தார். இவருக்கு ஒரு தம்பியும் உள்ளார். இவருடைய தம்பி ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். விக்ரம் சிங் அங்குள்ள பிபிஓ-வில் பணியாற்றி வருகிறார்.

4 வருடங்களுக்கு முன்னர் விக்ரம் சிங் வேலைப்பார்த்த நிறுவனத்தில் அபினவ் அகர்வால் என்பவர் பணியாற்றினார். அவர் விக்ரமுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி 1.5 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். பணத்தகராரை தீர்த்து கொள்வதற்காக அபினவை விக்ரம் சிங் வீட்டிற்கு அழைத்துள்ளார். 

வீட்டிற்கு வந்தவுடன் இருவரும் உணவு சாப்பிட்ட பிறகு மது அருந்தினர். விக்ரம் சிங்கின் தம்பி தன்னுடைய பக்கத்து வீட்டிலுள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றுவிட்டார். இன்று அதிகாலை விக்ரமின் வீட்டிலிருந்து பயங்கரமான அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த விக்ரமின் சகோதரர்கள் அவருடைய வீட்டிற்கு சென்று பார்த்தனர்.

அப்போது விக்ரம் சிங்கும், அவருடைய மனைவியும் குத்தி கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தனர். அருகிலேயே அபினவ் இருந்தார். அவரிடம் கேட்டதற்கு, பணத்தகராறு காரணமாக விக்ரம் சிங்கை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். அப்போது கூச்சலிட முயன்ற மனைவியையும் அபினவ் குத்தி கொலை செய்துள்ளார். மெயின் கேட் மூடி இருந்ததால் அபினவால் தப்பிக்க இயலவில்லை. 7 வயது குழந்தைக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.

உடனடியாக காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து அபினவை கைது செய்தனர். இந்த சம்பவமானது வட இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.