கோவையில் பயங்கரம்! பிரசவத்தின் போது குழந்தையை தரையில் தவறவிட்ட நர்ஸ்! கொட்டிய ரத்தம்! பிறகு நேர்ந்த விபரீதம்!

கோவையில் பிரசவத்தின் போது தாயின் வயிற்றில் இருந்து எடுத்த குழந்தையை நர்ஸ் தவறவிட்ட காரணத்தினால் அந்த குழந்தைக்கு தலையில் அடிபட்டு உயிரிழந்ததாக எழுந்துள்ள புகார் கேட்போரை அதிர வைத்துள்ளது.


கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் விக்ரம். இவர் நிறைமாத கர்ப்பினியான தனத மனைவி பவித்ராவை கடந்த சனிக்கிமை அன்று கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணான மருத்தவமனையில் அனுமதித்துள்ளார்.

 

பவித்ராவுக்கு நேற்று இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பவித்ராவுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

 

இதனை கேட்டு தந்தை விக்ரம் மகிழ்ச்சியில் துள்ளியுள்ளார். அப்போது அங்கு வந்த மருத்துவர்கள் குழந்தை இயல்பாக இல்லை என்றும் அழவில்லை என்றும் எனவே இன்குபேட்டரில் வைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனை கேட்டு விக்ரம் பதறியுள்ளார்.

 

பிறகு நேற்று இரவு குழந்தை இன்குபேட்டரில் வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று பிற்பகலில் குழந்தை இறந்துவிட்டதாக கூறி விக்ரமிடம் ஒப்படைத்துள்ளனர். இதனால் அழுது புலம்பிய விக்ரம் குழந்தையை எடுத்துக் கொண்டு அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு சென்றுள்ளார்.

 

அங்கு சென்று குழந்தைக்கான இறுதிச் சடங்கை செய்யும் போது குழந்தையின் தலையில் மருத்துவமனை நிர்வாகம் அணிவித்திருந்த சிறிய குல்லாவை அகற்றியுள்ளனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி நிலை குலையச் செய்துள்ளது.

 

குழந்தையில் தலையில் பலத்த காயம் இருந்துள்ளது. மேலும் ரத்தம் வெளியேறி உறைந்து போயிருந்தது. அத்துடன் குழந்தையின் குல்லாவிலும் ரத்தம் இருந்துள்ளது. இதனை அடுத்து ஆவேசமாக ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு வந்த விக்ரம் தனது குழந்தை எப்படி இறந்தது என்று கேட்டு சண்டை போட்டுள்ளார்.

 

ஆனால் விக்ரமுக்கு மருத்துவமனை நிர்வாகம் உரிய பதில் அளிக்கவில்ல. இதனை அடுத்து குழந்தையை பிரசவத்தின் போது நர்ஸ் தவறவிட்டதால் தான் தலையில் காயம் ஏற்பட்டு இறந்துவிட்டதாக கூறி விக்ரம் கதறி அழுதார். மேலும் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் அவர் மருத்துவமனை வாயிலிலேயே உறவினர்களுடன் அமர்ந்தார்.

 

பின்னர் அங்கு வந்த போலீசார் புகார் அளித்தால் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனை அடுத்து விக்ரம் காவல்நிலையம் புறப்பட்டுச் சென்றார். பச்சிளம் குழந்தையை பிரசவத்தின் போது நர்சால் தவறவிடப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் புகார் கேட்போரை கதிகலங்கச் செய்கிறது.