வாயில் எச்சில் ஊற வைக்கும் நக்மா பிரியாணி! சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பிரியாணி கடை!

பிரியாணி விற்பனையில் சாதனை படைத்து லிம்கா புத்தகத்தில் உணவகம் ஒன்று இடம்பிடித்துள்ளது.


பாரடைஸ் ஃபுட் கோர்ட் என்ற உணவகம் ஆனது லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. கமகம என மணம் வீசும் பிரியாணியை சாப்பிட யாருக்குத்தான் விருப்பம் இருக்காது.

பாசுமதி அரிசியை வேகவைத்து அதில் நமக்குத் தேவையான காய்கறிகளையோ அல்லது இறைச்சிகளையோ போட்டு வேகவைத்து, இஞ்சி பூண்டு விழுது அரைத்து, புதினா மற்றும் கொத்தமல்லி இலையை தூவி விட்டு செய்யும் பிரியாணிக்கான ருசியே தனி. பிரியாணி ஆனது அண்மைக்காலமாக இந்தியர்களின் மிகவும் விருப்பமான உணவு பட்டியலில் இணைந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை என்றாலே குடும்பத்துடன் வெளியில் செல்வோரின் விருப்பமான உணவு பட்டியலில் பிரியாணிக்கு தான் முதலிடம். பிரியாணியில் பலவகை உண்டு. கொல்கத்தா பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, நக்மா பிரியாணி, மலபார் பிரியாணி. இந்த பிரியாணியின் மூலம்தான் ஒரு உணவகம் ஒன்று லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து இருக்கிறது.

அந்த உணவகத்தின் பெயர் பாரடைஸ் ஃபுட் கோர்ட். 1960ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட இந்த உணவகத்திற்கு, அப்போது நூறு இருக்கைகளுடன் கூடிய ஒரே ஒரு உணவகம் தான் இருந்தது.  தற்போது சென்னை,  பெங்களூரு ஹைதராபாத், மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய நான்கு முக்கிய நகரங்களில் கிளைகள் உள்ளன.

இந்த உணவகம் ஆனது 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி டிசம்பர் மாத இறுதிக்குள் 70 லட்சத்து 44 ஆயிரத்து 289 பிரியாணிகளை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இதற்காகத்தான் தற்போது இந்த உணவகத்திற்கு லிம்கா சாதனை விருது வழங்கப்பட்டிருக்கிறது.

மும்பையில் நடைபெற்ற ஆசிய உணவு மாநாட்டில், சிறந்த பிரியாணிி தயாரிக்கும் உணவகம் என்ற பெயரையும் இது பெற்றுள்ளது. இது மட்டுமல்லாமல் உணவகத்தின் உரிமையாளருக்கு  வாழ்நாள் சாதனையாளர்  விருதும் வழங்கப்பட்டுள்ளது. 

எந்த பிரியாணி கடை நிறுவனமும் ஒரு வருடத்தில் இவ்வளவு பிரியாணி விற்றதுஇல்லையாம். பின்னர் நக்மா பெயரில் பிரியாணி விற்றால் வாங்கி சாப்பிடாமலா இருப்பார்கள் நம்மவர்கள்.