பன்னீர்செல்வம் எடப்பாடியை முதல்வராக அறிவித்தார்..! எதிர்க்கட்சி சூழ்ச்சிகள் முறியடிக்கப்பட்டன..!

கடந்த மூன்று மாதங்களாக அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளர் பஞ்சாயத்து நடந்துவந்தது. இந்த பிரச்னை இப்போதைக்கு முடியவே முடியாது. வரும் தேர்தல் வரையிலும் இந்த பிரச்னை எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று முதல்வர் எடப்பாடியை அடுத்த முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்துவிட்டார். கட்சிக்குள்ளும், ஆட்சியிலும் ஆளுமை மிக்க தலைவராக எடப்பாடி உருவெடுத்திருக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது.

இன்று முதல்வரும் துணை முதல்வரும் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி சமாதிக்குச் சென்று வந்தபிறகு செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பன்னீர்செல்வம், “அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் குழப்பம் ஏற்படுத்தும் எதிர்க்கட்சிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சியுடன் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளேன். எதிர்க்கட்சிகளின் கனவு பலிக்காது” எனத் தெரிவித்தார்.

ஆக, அ.தி.மு.க.வில் இருந்த அத்தனை குழப்பங்களும் தீர்ந்துபோயிருக்கிறது.