சென்னை விமானநிலையத்தில் பிரேமலதாவுக்கு தேமுதிக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ‘கேப்டன், அண்ணியார்...’ என்று உற்சாகமாக மலர்கள் தூவி முழக்கமிட்டனர். பிரேமலதாவுக்கு மலர்கொத்து, சால்வை கொடுத்து வாழ்த்தினர்.
விஜயகாந்தின் பத்மபூஷன் விருதுடன் திரும்பிய பிரேமலதாவுக்கு வரவேற்பு
டெல்லியில் அமைந்துள்ள ராஷ்டிரபதி பவன் மாளிகையில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் சார்பாக பத்ம பூஷன் விருதைப் பெற்றுக் கொண்டு திரும்பிய பிரேமலதா, சுதீஷுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.
சென்னை விமானநிலையத்தில் பிரேமலதாவுக்கு தேமுதிக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ‘கேப்டன், அண்ணியார்...’ என்று உற்சாகமாக மலர்கள் தூவி முழக்கமிட்டனர். பிரேமலதாவுக்கு மலர்கொத்து, சால்வை கொடுத்து வாழ்த்தினர்.
செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் கேப்டன் மேல் அன்பு கொண்ட உலக தமிழருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சேர்ந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் கேப்டனின் இந்த உயரிய விருதான பத்ம பூஷண் விருதை சமர்ப்பிக்கிறேன்.
இங்கிருந்து நேரடியாக கேப்டன் கோயிலுக்குச் சென்று அவருடைய காலடியில் இந்த விருதை சமர்ப்பிக்கப் போகிறோம். இந்த விருதை அவர் வந்து வாங்கி இருந்தால் இன்னும் பெருமையாக இருந்திருக்கும். கேப்டன் இல்லாத ஒவ்வொரு நிமிடமும் எங்களுடைய மனம் மரண வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் அவருக்காக மத்திய அரசு கொடுத்த இந்த உயரிய விருதுக்கு மத்திய அரசுக்கு அவர் சார்பில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இதனிடையே பிரேமலதாவுக்குப் பின்னே ஊர்வலமாக செல்வதற்கு தே.மு.தி.க. நிர்வாகிகளுக்கு போலீஸ் தடை விதிக்கவே, கொஞ்சநேரம் ஏரியாவில் சலசலப்பு நிலவியது.