ரஜினியை மிரட்டிப்பார்த்த பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன்! அப்புறம் அடிச்சார் ஒரு பல்டி

அடுத்த சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலினுக்கு கடும் போட்டியாளராக ரஜினிகாந்த் இருப்பார், கடைசியில் ரஜினியே வெல்வார் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ரஜினிக்கு ஆதரவாக பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் களம் இறங்கும் என்று தெரியவருகிறது.


இந்த நேரத்தில்தான் பா.ஜ.க. மேடையில் ஏறி மோடி, அமித்ஷா கூட்டணியை கிருஷ்ணர், அர்ஜூனன் என்று புகழ்ந்தார் ரஜினிகாந்த். இந்த விவகாரத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது, தி.மு.க. கும்பல்தான். ஏனென்றால், அடுத்த ஆட்சி நம்முடையதுதான் என்ற கோஷத்துக்குச் சிக்கல் வருகிறதே.

அதனாலோ என்னவோ, கன்னாபின்னாவென்று ரஜினியை தி.மு.க.வின் ஐ.டி. விங்க் கடுமையாக திட்டி வருகிறது. இவர்களுக்கு ஒரு படி மேலே போய் தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினரும், ஐ.டி. விங்க் தலைவர்களில் ஒருவருமான பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் ஒரு ட்வீட் வெளியிட்டு இருந்தார்.

அந்த ட்வீட்டில், ‘வலியச் சென்று கிருஷ்ணர், அர்ஜூனர் என்று புகழ்ந்தால் கடன் மோசடி வழக்கிலிருந்து கட்சி தாவிய சில தெலுங்கு தேசம் எம்.பி.களையும், லூயிஸ் பெர்கர் ஒப்பந்த மோசடி வழக்கிலிருந்து ஹிமாந்த பிஸ்வ சர்மாவையில் காப்பாற்றியது போல, தன் குடும்பத்தையும் பா.ஜ..க. காக்கும் என்று நினைக்கிறாரா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

லதா ரஜினிகாந்துக்கு 6.2 கோடி ரூபாய் பண மோசடி வழக்கு இருக்கிறது என்றும் தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த ட்வீட் தமிழகத்தில் பரபரவென பரவிவந்த வேளையில், திடீரென தன்னுடைய செல்போனில் இருந்து, இந்த ட்வீட்டை பழனிவேல்ராஜன் நீக்கம் செய்திருக்கிறார். ரஜினியைக் கண்டு பயந்துவிட்டாரா என்பதுதான் ரஜினி ரசிகர்களின் கேள்வி.