கேள்விகளால் செய்தியாளர்கள் எடுத்த சுளுக்கு! தெறித்து ஓடிய அன்புமணி!

அன்புமணி தைரியமாக முன்வந்து நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு செம ஹாட் மச்சி.


ராமதாஸ் அ.தி.மு.க.வுடன் உடன்படிக்கை கையெழுத்து போட்ட நேரத்தில், முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு டென்ஷனாக இருந்தவர் அன்புமணி. அதனால் ராமதாஸின் எண்ணப்படி அ.தி.மு.க.வில் சேர்ந்ததில் அன்புமணிக்கு விருப்பம் இல்லை என்று ஒருபக்கம் மக்கள் பொங்கிக்கொண்டே இருந்தனர்.

கூட்டணி வைக்கும் அதிகாரத்தை ராமதாஸிடம் கொடுத்துவிட்ட பிறகும் அன்புமணி ஏன் தி.மு.க.வுடன் பேசினார் என்பதுதான் கேள்வி. மேலும் தி.மு.க.வுடன் அன்புமணி பேச்சுவார்த்தை நடத்தியதை, அவரது மனைவி சௌமியாவின் சகோதரரும், காங்கிரஸ் கட்சியின்  செயல் தலைவருமான விஷ்ணு பிரசாத் போட்டு உடைத்துவிட்டார். 

இந்த காரணங்களால் பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்த்துவந்தார் அன்புமணி. விரைவில் தேர்தல் நடக்கும்போது எப்படியும் பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால், இப்போதே தயாராகி வந்தார். ஆனால், பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளில் டென்ஷனாகி ஆங்கிலத்துக்கு மாறிவிட்டார் அன்புமணி.

குற்றச்சாட்டு சொல்லிவிட்டு அவர்களுடனே கூட்டு சேர்வது நன்றாக இருக்கிறதா என கேட்டபோது, சிவசேனாவும், பா.ஜ.க.வும் சண்டை போட்டு சேர்ந்துகொண்டார்கள். மாயாவதியும் அகிலேசு சண்டை போட்டு சேர்ந்துகொண்டனர். நான் மட்டும் சேரக்கூடாது என்று சப்பைக்கட்டு கட்டினார்.

அடுத்த தேர்தலுக்கு பா.ம.க. எந்தப் பக்கம் இருக்கும் என்ற கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் திணறிப் போனார் அன்புமணி. குட்கா முறைகேடு குறித்து பேசும்போதும் அதேபோன்று சமாளித்தார்.

மைத்துணர் விஷ்ணுபிரசாத்தை வைத்து ஸ்டாலின் கேவலமான அரசியல் செய்திருப்பதாக கொந்தளித்த அன்புமணி, இதனால் தான் மட்டும் மனவேதனை அடைந்திருப்பதாகவும், கட்சிக்கு எந்த அவமானமும் இல்லை என்றார்.

எட்டு வழிச் சாலை குறித்த விவகாரத்தில் இன்னமும் எதிர்ப்பு நிலையில்தான் இருக்கிறோம் என்று தயங்கித்தயங்கித் தெரிவித்தார் அன்புமணி. அப்படின்னா எப்போ சார் போராட்டம் நடத்துவீங்க என்பதற்குத்தான் பதில் இல்லை.

மணிக்காக கட்சி நடத்தினால் பரிதாபம்தான் அன்புமணி.