காங்கிரசை கழட்டி விட மு க ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! அன்புமணி கூறும் அதிரடி காரணம்!

கூட்டணியிலிருந்து காங்கிரஸை கழட்டி விட மு க ஸ்டாலின் மாஸ்டர் பிளான் செய்து வருவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.


நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு ஓய்வில் இருந்த அன்புமணி நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பழனி முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் வருகை தந்தார். அங்கு முருகனை தரிசனம் செய்துவிட்டு அன்புமணி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அன்புமணி கூறியதாவது:

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பாமக கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும். உள்ளாட்சித் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும். ஸ்டாலின் என்னையும் எனது தந்தையையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி யையும் தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறார்.

பதிலுக்கு எங்களாலும் ஸ்டாலினை விமர்சிக்க முடியும். ஆனால் நாங்கள் விமர்சிக்க மாட்டோம். அரசியல் நாகரிகத்தை பாமக கடைபிடிக்கும். ராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிந்து விட்டு தற்போது சந்திரபாபு நாயுடு மற்றும் சந்திரசேகர ராவ் உடலும் கூட்டணி குறித்து ஸ்டாலின் பேசி வருகிறார்.

காங்கிரஸ் கட்சியை கழட்டிவிட்டு எப்படி மூன்றாவது அணிக்கு தாவலாம் என்று ஸ்டாலின் காய் நகர்த்தி வருகிறார். இதனையெல்லாம் தமிழக மக்கள் பார்த்துக்கொண்டு தான் ஸ்டாலின் என்ன திட்டம் போட்டாலும் அதனை மக்கள் முறியடிப்பார்கள்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.