திடீரென ஊருக்குள் புகுந்த விசித்திர விலங்கு! அடைக்கலம் கொடுத்து நெகிழ வைத்த நபர்!

குடிநீர் கிடைக்காமல் விலங்கு ஒன்று போராடிய சம்பவமானது பிரேசில் நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


பிரேசில் நாட்டின் சா பாலோ என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் தொடர்ந்து காடுகள் அழிக்கப்படுவதால் உயிரினங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றன. இதனால் அங்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

கெரியோ என்பவர் அந்த நகரத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது உயிரினமொன்று தள்ளாடியபடி நடந்து கொண்டிருந்தது. விலங்குகளைப் பற்றி கற்றுத்தெரிந்த கெரியோ விலங்கானது எறும்புத்தின்னி வகையை சேர்ந்த "ஆர்மிடெல்லோ" என்பதை கண்டறிந்தார்.

உடனடியாக தன்னுடைய லாரியின் குழாயிலிருந்து சிறிய பைப் மூலம் தண்ணீரை திறந்துவிட்டார். தண்ணீர் வருவதை கண்ட உயிரினம் தண்ணீரை அருந்தி தன்னுடைய வேட்கையை தணித்துக்கொண்டது.

இந்த சம்பவத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.