தொடர்கிறது ஆ(பாச) ராசாவுக்கு கிராமங்களிலும் எதிர்ப்பு... தி.மு.க. அம்புட்டுத்தானா..?

முதல்வரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று ஆ.ராசா கூறிவிட்டாலும், தமிழக மக்களின் கோபம் அடங்குவதாக இல்லை. ஆம், நெல்லை தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ் லட்சுமணன் உடையார்ப்பட்டி பகுதியில் வாக்கு சேகரித்த நேரத்தில் பெண்கள் தங்கள் கோபத்தைக் காட்டியிருக்கிறார்கள்.


முதலமைச்சர் எடப்பாடியை பத்தி ஆயிரம் பேசட்டும். ஆனால் செத்துப்போன அவரோட அம்மாவை கொச்சைப்படுத்தி ஏன் பேசணும்? பொம்பளங்கண்ணா அவ்வளவு இளக்காரமா? இந்த ராசா முதல்முறையா இப்படி பேசல. ஏற்கனவே பலமுறை பொம்பளங்களை ஆபாசமா பேசியிருக்காரு.

இப்படி பேசினதற்கு நியாயப்படி கட்சி தலைமை கடும் நடவடிக்கை எடுத்திருக்கணும். ஆனால் அப்படி செய்யல. அப்படிண்ணா தலைமையே இதை ஊக்குவிக்குது அப்படித்தானே அர்த்தம். பொம்பளைங்களை கேவலமா பேசிட்டு இப்ப எந்த மூஞ்சிய வெச்சிக்கிட்டு எங்க கிட்ட ஓட்டு கேட்டு வர்றீங்க?’’என திரண்ட பெண்கள் ஆளாளுக்கு கொதித்தனர்.

இனியும் இங்கே இருந்தால் சிக்கலாகிவிடும் என்று தப்பியோடி இருக்கிறார் தி.மு.க. வேட்பாளர் லட்சுமணம். இன்னும் எங்கேயெல்லாம் பிரச்னை வெடிக்கப் போகிறதோ...?