அதிரடியாக களமிறங்க காத்திருக்கும் ஒப்போவின் அடுத்த துணை நிறுவனம்- ரெனோ!!

ஒப்போ நிறுவனம் தன்னுடைய துணை நிறுவனமாக ரெனோ நிறுவனத்தை சீனாவில் அறிமுகம் செய்த்துள்ளது.


தற்போது பல முன்னணி  நிறுவனங்கள் தங்களுடைய துனை நிறுவனங்களை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த வரிசையில் ஒப்போவும் ஒன்று என்றே கூறலாம்.  


கடந்த ஆண்டு ஒப்போ ரியல்மி என்கிற துனை நிறுவனத்தை அறிமுகம் செய்தது பின்பு அதனை தனி நிறுவனமாக சந்தையில் அறிவித்தது.  தற்போது ஒப்போ தன்னுடைய அடுத்த துனை நிறுவனத்தை அறிமுகம் செய்த்துள்ளது.

இந்த புதிய துனை நிறுவனத்தின் பெயர் ரெனோ என கூறியுள்ளது .


ரெனோ நிறுவனத்தின் கீழ் புதிய ஸ்மார்ட் போன்களை வரும் ஏப்ரல் மாதம் 10 ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று ஒப்போ நிறுவனம் அறிவித்துள்ளது.


இந்த ரெனோ நிறுவனத்தின் லோகோ வை தற்போது சமூக வலைதளத்தில் ஒப்போ நிறுவனம் வெளியீட்டுள்ளது. இந்த புதிய வகை ஸ்மார்ட் போன் முக்கியமாக இளைஞர்களை கவரும் விதமாக வெளியிடப்படும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அனால் இதனை பற்றிய அதிகார்வப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ரெனோ நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் மிக விலை உயர்ந்ததாகவும் பல தொழில்நுட்பங்களை கையாளப்பட்டு வெளியிடப்படும் என்று ஒப்போ அறிவித்துள்ளது.