கொரோனா ஊரடங்கால் கோடி கோடியாக சம்பாதிக்கும் ஒரே இந்திய தொழில் அதிபர்! யார், எப்படி தெரியுமா?

இந்தியா முழுவதிலும் ஊரடங்கினால் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் ஒரு தொழிலதிபர் மட்டும் லாபம் ஈட்டியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 73,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 13,40,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதனால் நாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டு மக்கள் அனைவருடைய பொருளாதாரமும் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொழிலதிபர் ஒருவர் லாபமீட்டுமிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

அவென்யூ சூப்பர் மார்க்கெட் என்ற நிறுவனத்தை ராதாகிருஷ்ணன் தமானி என்பவர் நடத்தி வருகிறார். இவருடைய மொத்த சொத்து மதிப்பு 10.2 பில்லியன் மதிப்பாகும். இந்நிலையில் இந்த ஆண்டு மட்டும் அவருடைய சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 18 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

அவென்யூ சூப்பர் மார்க்கெட் மற்றும் டீ மார்ட் ஆகிய நிறுவனங்கள் மளிகை பொருட்கள் சார்ந்த நிறுவனங்களாகும். பல்வேறு கடைகள் மூடப்பட்டிருப்பினும், இத்தகைய நிறுவனங்கள் மட்டும் தொடர்ந்து பணியாற்றி வந்ததால், இத்தகைய நிறுவனங்களின் தொழிலதிபர்கள் பெருமளவில் லாபத்தை ஈட்ட முடிந்தது.

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி நஷ்டத்தை சந்தித்திருக்கும் தருவாயில் இவர் லாபத்தை ஈட்டியுள்ள செய்தியானது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.

இந்த தகவலானது சமூக வலைத்தளங்களில் பெரிதளவில் வைரலாகி வருகிறது.