தலைப்புகோவை சிறுமி உடலில் 2வது நபரின் விந்தணு..! தீர்ப்புக்கு முதல் நாள் அம்பலமான பகீர் தகவல்!

6 வயது சிறுமியை பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது போன்று மற்றொருவருக்கும் வழங்க வேண்டுமென்று சிறுமியின் தாயார் கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டுள்ளார்.


இந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ஆம் தேதியன்று கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூர் பகுதிக்குட்பட்ட பன்னீர் மாடு பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி காணாமல் போனார். அவர் வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது காணாமல் போனதாக கூறப்பட்டது.

அடுத்த நாளே அந்த குழந்தை துணியால் கட்டப்பட்டு அதே வீட்டின் எதிரே சடலமாக கிடந்தது குழந்தையின் நிலையை கண்ட பெற்றோர் கதறி அழுத காட்சி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 200-க்கும் மேற்பட்ட நபர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இறுதியாக மார்ச் 31-ஆம் தேதியன்று சந்தோஷ் குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நேற்று முன்தினம் சந்தோஷ் குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தூக்கு தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் வழக்கில் திடீர் திருப்பமாக சந்தோஷ் குமார் உட்பட வேறு ஒருவருக்கும் இதில் சம்பந்தம் உள்ளதாக அன்று பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தார். 

இது குறித்து அவரிடம் கேட்டபோது, "என்னுடைய மகளின் நினைவுகள் என்னை வாட்டி வதைத்ததால் அங்கிருந்து வேறு ஒரு இடத்திற்கு குடிபெயர்ந்தேன். எனக்கு பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிட்டது. இந்நிலையில் சந்தோஷ்குமாருக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தபோது, இதில் வேறு ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறினார். அவருக்கும் இதே போன்ற தீர்ப்பு கிடைத்தால் தான் என் மகளின் ஆன்மா சாந்தி அடையும். இந்த வழக்கு தொடர்ந்து 10 மாதங்கள் ஆகிவிட்டன. என்னுடைய குழந்தையின் எலும்புக்கூட மிஞ்சியிருக்காது" என்று கண்ணீர் மல்க கூறினார்.

இந்த சம்பவமானது கோயம்புத்தூர் மாவட்டத்தின் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.