பெற்ற குழந்தையை உயிரோடு புதைக்க குழி தோண்டிய தந்தை! அதிர வைத்த சம்பவத்தின் பதற வைக்கும் காரணம்!

பெண் குழந்தையை உயிருடன் புதைக்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவமானது தெலங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஹைதராபாத் மாநிலத்தில் ஜூபிலி பேருந்து என்ற இடம் அமைந்துள்ளது. பேருந்திற்கு அருகே உள்ள காலியிடத்தில் முதியவர் ஒருவர் குழி ஒன்றை தோண்டி கொண்டிருந்தார். அவ்வழியே சென்றார் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், முதியவரின் செய்கையை பார்த்து  சந்தேகமடைந்த அப்பகுதி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் முதியவரிடம் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அவர் கையில் வைத்திருந்த பையில் குழந்தை இருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். குழந்தையை பற்றி விசாரித்ததில், இருவரும் தங்களை குழந்தையின் தந்தை மற்றும் தாத்தா என்று அறிமுகப்படுத்தி கொண்டனர். குழந்தை பிரசவத்தின் போது இறந்ததால், பேருந்தில் ஏற்றி செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் இதனால் புதைக்க முயற்சி செய்து கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் அவர் குழந்தையை வாங்கி பார்த்தபோது, உயிருடன் இருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இருவரையும் கைது செய்த காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.