மாரடைப்பால் பலியான இந்து..! ஊரடங்கால் பின்வாங்கிய உறவுகள்..! குல்லாவுடன் களம் இறங்கி இறுதிச்சடங்கு செய்த முஸ்லீம்கள்! நெகிழ வைக்கும் சம்பவம்!

மாரடைப்பால் உயிரிழந்த இந்து முதியவருக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் இஸ்லாமியர்கள் உடல் தகனம் செய்துள்ள சம்பவமானது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது ‌.


நாடு முழுவதிலும் தற்போது 4-வது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் மக்களால் தற்போதுவரை சொந்த ஊருக்கு செல்வதற்கு சிரமமாக இருக்கிறது. இறந்துபோன தங்களுடைய உறவினர்களை கூட காண இயலாமல் தவித்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் அகோலா என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு வயதான தம்பதியினர் ஒருவர் வசித்து வந்தனர். இந்நிலையில் மூதாட்டிக்கு எதிர்பாராவிதமாக கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக பரிசோதனையில் தெரிய வந்ததால் அவரை அதிகாரிகள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த மூதாட்டியின் கணவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார். இத்தம்பதியினர் என் மகன் நாக்பூரில் வசித்து வருகிறார். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் தன்னால் அகோலாவிற்கு வர இயலாது என்றும், தந்தையின் சடலத்தையும் வாங்கிக் கொள்வதில் விருப்பமில்லை என்றும் கூறியுள்ளார்.

இதனை அறிந்த அகோலா குச்சி மேமன் ஜமாத் இஸ்லாமிய அமைப்பினர் முதியவரின் சடலத்திற்கு இறுதி சடங்கு செய்ய முடிவெடுத்தனர். அதன்படி அவர் இந்து என்பதை தெரிந்து கொண்ட பின்னர் இந்து முறைப்படி இறுதி சடங்கை செய்துள்ளனர். 

இதுகுறித்து அந்த அமைப்பினர் கூறுகையில், போடாங்க அமல்படுத்தப்பட்டுள்ளதால் பலரும் இறந்த உறவினர்களின் சடலங்களை கூட பெற்றுக்கொள்ள முன்வருவதில்லை. நாங்கள் இறந்தவர்களின் சடலங்களை பெற்றுக்கொண்டு அவரவர் சமய முறைப்படி அவற்றிற்கு இறுதி சடங்குகள் செய்து வருகின்றோம். இதுவரை ஊரடங்கு காலத்தில் கிட்டத்தட்ட 21 சடலங்கள் வரை இறுதி சடங்கு செய்துள்ளோம்" என்று கூறியுள்ளனர்.

இந்த செய்தியானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.