சமையல், சாப்பாடு, தூக்கம் எல்லாம் கழிவறையில் தான்! 72 வயது மூதாட்டியின் பரிதாப நிலை! அதிர வைக்கும் காரணம்!

கடந்த 3 வருடங்களாக மூதாட்டி ஒருவர் கழிவறையில் வசித்து வரும் அவலமானது ஒடிசாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஒடிசா மாநிலத்தில் மயூர்பஞ்ச் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு திரௌபதி பெஹரா என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவருடைய வயது 72. இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து போனார். இந்நிலையில் இவர் தன்னுடைய மகள் மற்றும் பேரனுடன் வசித்து வருகிறார். 

தங்களுக்கென ஒரு வீட்டை கட்டி கொள்வதற்கு வசதியில்லாததால் இவர்கள் ஊராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள கழிவறையில் வசித்து வருகின்றனர். மிகவும் சிறிய இடத்தில் அவர்கள் சமையல் செய்கின்றனர். அங்கேயே மூதாட்டி படுத்து கொள்கிறார். மகளும், பேரனும் கழிவறைக்கு வெளியே படுத்துக்கொள்கின்றனர்.

இந்த செய்தியை குறித்து ஊராட்சி செயலரிடம் விசாரித்தபோது, மூதாட்டிக்கு வீடு கட்டித் தருவதற்கு தனக்கு அதிகாரமில்லை என்றும் ஊராட்சி நிதியிலிருந்து கட்டித்தருவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

இந்த செய்தியானது ஒடிசா மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.