கத்தை கத்தையாக பணம்..! கொத்து கொத்தாக நகை! பிச்சை எடுக்கும் பெண்மணியின் பேங்க் பேலன்ஸ்! தலை சுற்றிப் போன புதுச்சேரி போலீஸ்!

பிச்சையெடுக்கும் மூதாட்டியிடம் தங்க நகைகள் மற்றும் பணமிருப்பதை கண்ட காவல்துறையினர் விசாரணையில் உள்ளனர்‌.


புதுச்சேரியில் காந்தி வீதி அமைந்துள்ளது. இந்த வீதியில் ஈஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வாசலில் ஏராளமானோர் பிச்சையெடுத்து வருகின்றனர். பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால் அவர்களை அப்புறப்படுத்த மாநகராட்சி ஊழியர்கள் சென்றுள்ளனர்.

அப்போது ஒரு மூதாட்டியை அப்புறப்படுத்தி கொண்டிருந்த போது, அவருடைய பையில் தங்க நகைகள், மற்றும் பணமிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அப்பகுதி காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். 

காவல்துறையினர் விரைந்து வந்து மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர். அவருடைய பெயர் பர்வதம் என்பதை கண்டுபிடித்துள்ளனர். அதன் பின்னர் அவருடைய பையில் 15,000 ரூபாய் பணமும், வங்கி சேமிப்பு புத்தகமும், தங்க நகைகளும், ரேஷன் கார்டு முதலியன இருந்துள்ளன. 

காவல்துறையினர் தொடர்ந்து மூதாட்டியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது ஈஸ்வரன் கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.