தெரு நாய்களுக்கு உணவான பச்சிளம் குழந்தை! நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!

பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்றை தெருநாய்கள் தங்களுக்கான உணவாக சாப்பிட்டுக் கொண்டிருந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.


ஒடிசா மாநிலத்தில் உள்ளது கேந்திரபாரா நகரம். இந்த நகரத்தின் அரசு மருத்துவமனை அருகே நாய்கள் சுற்றி நின்று ஏதோ ஒன்றை தின்றுகொண்டிருந்தன. அப்போது அங்கு இருந்து துர்நாற்றம் வீச வழிப்போக்கர்கள் அது என்ன என்று பார்த்துள்ளனர்.

அவர்கள் பார்த்த காட்சியை அவர்கள் நெஞ்சை அடைக்க வைத்தது. காரணம் பிறந்த குழந்தை ஒன்றை நாய்கள் தின்றுகொண்டிருந்தன. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த போலீசார் நாய்களை விரட்டி அந்தக் குழந்தையின் சடலத்தை எடுத்துச் சென்றனர். மருத்துவமனை அருகே எரிந்த சம்பவம் நிகழ்ந்ததால் அங்கு பிரசவத்திற்கு வந்த ஏதேனும் ஒரு மாபாதகி தனது குழந்தையை இப்படி குப்பையில் வீசி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் வழக்குப்பதிவு செய்து அந்தப் பெண்மணியை தேடியும் வருகின்றனர்.