கையில் கட்டு..! உடலில் சோர்வு..! ஹாஸ்பிடலில் இருந்து வீடு திரும்பினார் ஓபிஎஸ்!

சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த நிலையில் மிகவும் சோர்வுடன் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் வீடு திரும்பியுள்ளார்.


துணை முதலமைச்சர் ஓபிஎஸ் நேற்று மாலை சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு சென்றார். இதனால்அவருக்கு உடல் நிலை சரியில்லை என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் பொது உடல் பரிசோதனைக்கு ஓபிஎஸ மருத்துவமனைக்கு வந்திருப்பதாக மருத்துவமனை தரப்பு விளக்கம் அளித்தது.

மேலும் உடல் பரிசோதனை முழுவதும் முடிந்து இன்று மாலையே ஓபிஎஸ் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் எம்ஜிஎம் மருத்துவமனை தெரிவித்தது. அதன்படி இரவு ஏழு முப்பது மணி அளவில் மருத்துவமனையில் இருந்து ஓபிஎஸ வீடு திரும்பினார். அப்போது அவர் மிகவும் சோர்வாக காணப்பட்டார்.

மேலும் ஓபிஎஸ கையிலும் பேண்டேஜ் கட்டு இருந்தது. இதனால் அவருக்கு உண்மையில் பரிசோதனை மட்டும் தான் நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் சிகிச்சை அளிக்கப்பட்டதா என்று விவாதங்கள் எழுந்துள்ளன.