கைகளை கோர்த்து கண்களை மூடி ரயில் முன் பாய்ந்த காதல் ஜோடி! உடல்கள் துண்டு துண்டான பரிதாபம்! அதிர்ச்சி காரணம்!

மாணவியொருவர் காதலனுடன் சேர்ந்து ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி என்னும் இடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட தொரப்பாடி எனும் கிராமத்தில் சாந்தி என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவருடைய வயது 22. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். 

இப்பகுதிக்கு அருகே உள்ள கோட்டலாம்பட்டி என்னுமிடத்தில் மதன் என்ற 22 வயது இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார். இருவருக்குமிடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியது. இவர்களுடைய காதல் விவகாரமானது இருவீட்டாருக்கும் தெரிய வந்தது. அவர்கள் இவர்களுடைய திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஒன்றாக இணைந்து வாழ தான் இயலவில்லை, சாகவாவது செய்வோம் என்று இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர். அதன்படி இருவரும் பணப்பாக்கம் ரயில்வேகேட் பகுதிக்கு வந்துள்ளனர். 

சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில் முன் கண்ணை மூடிக்கொண்டு பாய்ந்துள்ளனர். இதனால் சம்பவ இடத்திலேயே சிதறி பறந்தன. இதனால் என்ஜின் டிரைவர் கடுமையாக அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ரயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். 

சம்பவம் அறிந்த காவல்துறையினர் ரயில்வே கேட் பகுதிக்கு விரைந்து வந்தனர். 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவமானது பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.