நர்சிங் மாணவியை கடத்திச்சென்ற தாய்மாமன்! அடுத்து நடந்த கொடூரம்! திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள்

கல்லூரி மாணவி ஒருவரை திருமணம் செய்யும் நோக்கத்துடன் தாய் மாமாவே கடத்தியுள்ள சம்பவமானது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிபட்டினம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இதன் அருகே சவுளூர் என்னும் கிராமம் உள்ளது. இப்பகுதியை பூர்வீகமாகக் கொண்ட 18 வயது பெண் ஒருவர் தர்மபுரியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் கோர்ஸில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். 

எதிர்பாராவிதமாக 11-ஆம் தேதியன்று வீட்டிலிருந்த மாணவி திடீரென்று காணாமல் போயுள்ளார். பெற்றோர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இருப்பினும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. பதறிய நிலையில் காவேரிப்பட்டினம் காவல் நிலையத்தில் தன்னுடைய மகள் காணவில்லையென்று மாணவியின் தந்தை புகார் அளித்தார். 

புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் சில திடுக்கிடும் உண்மைகளை கண்டுபிடித்தனர். மாணவியின் சொந்தத் தாய்மாமனை மகனான சந்திரன் என்பவருடன் மற்றொரு உறவினரான மணிகண்டன் மாணவியை கடத்தியுள்ளனர். திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் மாணவியை கடத்தி சென்றுள்ளனர்.

சந்திரன் மற்றும் மணிகண்டனை காவல்துறையினர் சிறையில் அடைத்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது காவேரிப்பட்டணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.