திருமணமான 30நாளில் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த நர்ஸ்! 3 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்த திடுக் சம்பவம்!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மாவட்டத்தில் பொன்மலை எனும் இடம் அமைந்துள்ளது. இதன் அருகேயுள்ள  மேல்கல்கண்டார்கோட்டை  கிராமத்தை சேர்ந்தவர் அஜிதா. இவர் செவிலியர் பணியில் ஈடுபட்டு வருகிறார். அப்பாவின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கருங்கல் எனும் கிராமமாகும். நர்சிங் படிப்பு முடித்த பின்னர் சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.

இவருக்கும் அதே மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றும் என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டது. நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதலை அறிந்த அஜிதாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தன் மகளுக்கு அவசர அவசரமாக திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்தனர். அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜெகன்பாபு என்பவருடன் 2016-ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது.

ஜெகன்பாபு சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் வந்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் கல்லுவிளையில் தங்கி இருந்தனர். விடுமுறை முடிந்த பின்னர் அஜிதா சென்னைக்கு வந்தார். தனக்கு நேர்ந்த கட்டாய திருமணம் பற்றி பிரண்ஸிடம் அழுது புலம்பியுள்ளார். 

இருவரும் சேர்ந்து கணவரை கொலை செய்யத் திட்டமிட்டனர். அதன்படி அஜிதா தனக்கு தோழியர்கள் சேர்ந்து பார்ட்டி அளிக்க போவதாக கூறி ஜெகன் பாபுவை வரவழைத்தனர். திருச்சிக்கு ரயில் வந்து கொண்டிருந்த ஜெகன் பாபுவுடன் அதே ரயிலில் பிரிண்ஸ் பயணித்தார். அவரிடம் அஜிதாவின் மருத்துவமனையில் வேலை பார்க்கும் மருத்துவர் என்று தன்னை பிரிண்ஸ் அறிமுகம் செய்துகொண்டார்.

சந்தர்ப்பம் கிடைத்தபோது வீரத்தில் முகத்தில் போர்த்திக் ஜெகன்பாபுவை கழுத்தை நெரித்து கொலை செய்தார். தண்டவாளத்தில் போட்டுவிட்டால் தற்கொலை செய்து கொண்டார் என்பது போல ஆகிவிடும் என்று எண்ணி ஜெகன் பாபுவின் உடலை தண்டவாளத்தில் வீசினார். ஆனால் ஜங்ஷன் பகுதி என்பதால் ரயில் மெதுவாக வந்தது.

ரயில் ஓட்டுனர் தண்டவாளத்தில் உடல் இருப்பதை கண்டு பிடித்து காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தார். காவல்துறை விரைந்து வந்து உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணை நடத்தியதில் அஜித்தா மற்றும் பிரண்ஸ் கொலை செய்ததை கண்டுபிடித்தனர். இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் சில மாதங்களிலேயே இருவரும் ஜாமீனில் வெளிவந்தனர். இந்த நிகழ்வுகள் அனைத்தும் 2016-ஆம் ஆண்டு நடைபெற்றன.

அஜிதா தற்போது மேல்கல்கண்டார்கோட்டையில் நர்சாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று நெடுநேரமாகியும் அஜிதா தன்னுடைய வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனை சந்தேகித்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே நுழைந்தபோது அஜிதா சடலமாக உயிரிழந்து கிடந்தார். அவரது உடலீ அருகில் விஷ மருந்தும், மாத்திரைகளும் இருந்துள்ளன. மேலும் மின்விசிறியை துப்பட்டா போட்டு தூக்குமாட்டி கொள்வதற்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

இதனால் காவல் துறையினர் குழப்பமடைந்தனர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவமானது மேல்கண்டார்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.