குழந்தையின் தலை தாயின் கருவில்! உடல் செவிலியரின் கையில்! பிரசவத்தில் நிகழ்ந்த கொடூரம்!

ராஜஸ்தானில் பிரசவத்தின் போது மோசமாக நடந்து கொண்ட நர்சால், குழந்தையின் தலை தாயின் வயிற்றிலே சிக்கிக் கொண்ட நிலையில் உடல் மட்டும் வெளியே வந்த கொடூர நிகழ்வு அரங்கேறியுள்ளது.


ராஜஸ்தான் மாநிலம் ராம்காரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு அம்ரித் லால், ஜூஜார் சிங், ஆகிய இரு ஆண் செவிலியர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது குழந்தையை மிகவும் கொடூரமான முறையில் இவர்கள் வெளியில் இழுத்து உள்ளனர். தலையை பிடித்து எடுத்தால் மட்டுமே குழந்தை முழுதுமாக வெளியில் வரும் என்பது கூட தெரியாமல் தலைகீழாக இருந்த குழந்தையை காலை பிடித்து வேகமாக இழுத்துள்ளனர். 

இதனால் குழந்தையின் தலை தாயின் வயிற்றிலேயே துண்டானது. உடல் மட்டும் இவர்கள் இருவர் கையில் கிடைத்துள்ளது. இதனால் பதற்றமடைந்த அந்த ஊழியர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் குழந்தையின் உடலை கொண்டுபோய் பிண அறையில் வைத்து விட்டனர். இதையடுத்து ஜோத்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அந்தப் பெண் கொண்டு செல்லப்பட்டார். 

முன்னதாக பிரசவத்தை முடித்துவிட்டதாகவும் தொப்புள்கொடி மட்டும் வயிற்றில் இருப்பதாகவும் அந்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது இதையடுத்து அந்த மருத்துவமனை மருத்துவர்கள் அப்பெண்ணுக்கு அறுவைச்சிகிச்சை மேற்கொண்டனர். குழந்தையின் தலை தாயின் வயிற்றுக்குள் இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றனர். 

இந்த தகவலை கேட்ட பெண்ணின் உறவினர் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளாகினர். தனது குழந்தையை கொன்ற அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது பெண்ணின் கணவர் புகார் கொடுத்துள்ளார். இந்த நிலையில் குழந்தையைக் கொன்ற ஊழியர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 

அன்று பிரசவத்திற்கு வராத மருத்துவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து ஒரு வாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.