குழந்தை பிறந்த உடன் அழவில்லையா’? அப்போ இந்த சிகிச்சை அவசியம்...

ஒரு குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை, அதன் முதல் அழுகையின் மூலம் எளிதில் கண்டறியலாம். பிறந்தவுடன் குழந்தை அழவேண்டும் என்றுதான் மருத்துவர்களும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் சில குழந்தைகள் அழுவதற்கு மிகவும் தாமதம் ஆகலாம், அல்லது அழாமலே இருக்கலாம்.


·         குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சுவாசக் குறைபாடு இருப்பதன் காரணமாக அழாமல் இருக்கலாம்.

·         சளி, அமோனியா திரவங்கள் மூக்கு, வாயில் அடைத்திருப்பதால் குழந்தை அழமுடியாமல் போகலாம். இதனை மருத்துவர் கண்டறிந்து அகற்றினால் மட்டுமே குழந்தையால் அழமுடியும்.

·         கர்ப்பப்பையில் இருந்து குழந்தை வெளியே வந்தபிறகும், அதனை உணராமல் சில குழந்தைகள் இருப்பதுண்டு, இதுவும் அழாமல் இருப்பதற்கு காரணமாக கருதப்படுகிறது.

·         பேச்சுக் குறைபாடு அல்லது வேறு சில உடல் நலக்குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகளும் அழாமல் இருக்கலாம்.

குழந்தையின் உடலும் மூளையும் இணைந்து செயல்படத் தொடங்குவதன் அறிவிப்பு என்றும் அழுகையை எடுத்துக்கொள்ளலாம். அழாத குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்துவதற்கு நியோனடல் சிகிச்சை கைகொடுக்கிறது.