குடும்ப அரசியலுக்கு நோ.... தமிழக வாக்காளர்கள் திடவட்டம்

குடும்ப அரசியலுக்கும் மக்கள் அரசியலுக்கும் இடையிலான போராகத்தான் இந்த தேர்தல் இருக்கிறது. குறிப்பாக, குடும்ப அரசியலுக்கு மக்கள் யாருமே ஆதரவாக இல்லை என்பது தெரியவந்துள்ளது.


அண்ணா காலம் வரை திமுக மக்கள் கட்சியாக இருந்தது. அவரது மறைவுக்குப் பிறகு என்றைக்கு கருணாநிதி தலைவரானாரோ அன்று முதல் திமுக வாரிசு அரசியலை வளர்த்தெடுக்கும் குடும்ப கட்சியாக மாறிவிட்டது. முரசொலி மாறன், மு,க. முத்து, மு.க அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி மாறன், உதயநிதி என மருமகன், மகள், மகன்களில் தொடங்கி இப்போது பேரன், எதிர்காலத்தில் கொள்ளுபேரன் வரை திமுகவில் கருணாநிதி குடும்பம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

வெளியில் தெரிந்த இவர்கள் தவிர செல்வி, செல்வம், தமிழரசு, துர்கா ஸ்டாலின் என மறைமுக ஆதிக்கம் செலுத்தும் கூட்டமும் உள்ளது. ஆட்சியில் இல்லாத நேரங்களில் கட்சி விவகாரங்களில் இவர்கள் வைத்ததுதான் சட்டம். ஆட்சி கைவசம் இருந்துவிட்டாலோ கேட்கவே வேண்டாம்.

ஆளுக்கொரு திசையில் அதிகாரத்தை வளைப்பதால் நிர்வாகம் சீர்குலையும். திமுக ஆட்சிக் காலத்தில் பணியாற்றிய அதிகாரிகளைக் கேட்டால் கதைகதையாக சொல்வார்கள். இந்த இழிநிலையை கருணாநிதியும் சரி, ஸ்டாலினும் சரி கொஞ்சமும் தட்டிக் கேட்டதில்லை.

அதேசமயம் ஆளும் அதிமுகவில் முதல்வர் எடப்பாடி தொடங்கி பெரும்பாலான அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் வரை மிகப் பெரும்பாலானோர் வாரிசு அரசியலை தொடரவில்லை என்பதுதான் நிஜம். ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் கட்சித் தலைமை இதற்கு ஆதரவு அளிக்கவில்லை என்கிற எதார்த்த நிலையை சாதாரண மக்கள் கூட புரிந்து வைத்துள்ளனர்.

மக்களின் இந்த மனநிலை தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கத்தான் போகிறது. அப்புறமென்ன, இலைக்குத்தான் வாய்ப்பு.