ஹாஸ்பிடலில் அசுத்தமாக இருந்த கழிப்பறை! தானே களம் இறங்கி சுத்தம் செய்த திமுக எம்எல்ஏ!

வந்தவாசி அரசு மருத்துவமனை சுகாதாரமின்றி இயங்கி வருவதற்கு எதிராக திமுக எம்.எல்.ஏ போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி எனும் இடம் அமைந்துள்ளது. இந்த பகுதியின் எம்.எல்.ஏ-வாக அம்பேத்குமார் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திமுகவை சேர்ந்தவர். இந்நிலையில் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சுகாதாரம் சீர்கெட்டு விட்டதாக தமிழக அரசுக்கு அறிவுறுத்தும் வகையில் நேற்று காலையில் போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் 50-க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டத்திற்கு பின்னர் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்திய அவர், அங்க சுத்தமாக இருந்த கழிவறையை சுத்தம் செய்தார். பின்னர் வார்டுகளுக்கு சென்று ஆய்வு செய்தபோது, பெண்கள் வார்டில் முதியவர் ஒருவர் தரையில் படுத்துக்கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவருக்கு போர்வை முதலிய பொருட்களை வழங்கினார். எம்.எல்.ஏ பார்வையிட்டதால் வந்தவாசி அரசு மருத்துவமனையில் பதற்றம் ஏற்பட்டது.