மருத்துவமனையில் நல்லகண்ணுவை பார்க்க யாரும் வரவேண்டாம்.! ஆனால், ஒரு நல்ல செய்தியும் உண்டு.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு கடந்த சில நாட்களாகவே லேசான காய்ச்சல் அறிகுறி இருந்துள்ளது.


96 வயதாகும் நல்லகண்ணு தற்போதும் சுறுசுறுப்போடு அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ஊரடங்கு காலங்களில் வெளியில் செல்வதை தவிர்த்த அவர் சுதந்திரத் தினம் உள்ளிட்ட ஒரு சில நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்றார். இந்த நிலையில் சில நாட்களாக காய்ச்சல் குறையவில்லை என்றதும், நேற்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காய்ச்சல் என்பதால் அவருக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது நல்லவேளையாக அவருக்கு கொரோனா பரிசோதனையில் நெகடிவ் முடிவு கிடைத்துள்ளது. சாதாரண காய்ச்சல், சளி என்பதால் இரண்டு நாட்களுக்குள் குணமாகி வீட்டுக்குத் திரும்பிவிடுவார் என்று சொல்லப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நல்லகண்ணுவை பார்த்து நலம் விசாரிக்க யாரும் வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.