உள்ளாட்சி தேர்தல் நடத்துவதை யாராலும் தடுக்க முடியாது! முதலமைச்சர் எடப்பாடி திட்டவட்டம்!

உள்ளாட்சித் தேர்தலுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் முட்டுக்கட்டை போட பார்க்கிறார் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.


புதியதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தை அடுத்து தென்காசி மாவட்ட துவக்க விழா தமிழக அரசு சார்பில் கோலாகலமாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார்.

அப்போது பேசிய அவர் உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசு தள்ளிப் போடுவதற்கு முயற்சி செய்து வருவதாக திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கூறிவருவது எங்களால் ஏற்றுக்கொள்ள இயலாது என்று கூறினார்.

உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதில் அதிமுக அரசு மிகவும் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. தேர்தல் நடக்க வேண்டும் என்பதற்கு எந்தவித மாறுபட்ட கருத்தும் எங்களிடம் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

இப்படி இருக்க முகஸ்டாலின் எங்களுக்கு எதிராக பேசி வருவது முறையானது அல்ல எனவும் ஒரு சிலர் இந்த உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் முட்டுக்கட்டை போடுபவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

 எத்தனை முட்டுக்கட்டை போட்டாலும் உள்ளாட்சி தேர்தல் வெற்றிகரமாக நடந்தேறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த கூட்டத்தில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.