இந்த காலத்து பசங்க எவ்ளோ சூப்பரா செய்றாங்க..! என் புருசன் வேஸ்ட்..! விஜே மணிமேகலை ஷாக் தகவல் !

விஜய் டிவியில் குக் வித் கோமாளி, கலக்கப் போவது யாரு சேம்பியன்ஸ் நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினி மணிமேகலை டிவியில் தொகுப்பாளினியாக இருப்பதையே விரும்புவதாகவும், சினிமா மீது ஆசை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.


மிஸ்டர் அன்ட் மிசஸ் நிகழ்ச்சியில் மணிமேகலையின் திறமையை பார்த்து `கலக்கப்போவது யாரு சேம்பியன்ஸ்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு கொடுத்தது விஜய் தொலைக்காட்சி. காதல் திருமணம் செய்த தனக்கு இரண்டு வீட்டிலேயும் ஆதரவு தரவில்லை எனக்கூறும் மணிமேகலை எந்த குடும்ப நிகழ்ச்சிக்கும் பெற்றோர் கலந்து கொள்வதில்லை என வருத்தம் தெரிவித்தார்.

பெரும்பாலான பெண்கள் தாய்வீட்டில் இருக்கும்போது சமையல் கற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். பின்னர் மாமியார் வீட்டிற்கு சென்றபிறகுதான் சமையல் செய்ய பழகுகிறார்கள் எனக் கூறும் மணிமேலை யூடியூப் பார்த்து சமைத்தாலும், அருகில் பெரியவர்கள் இருந்து சொல்லிக் கொடுப்பது போல் வராது என கூறுகிறார். மேலும் கணவரும் நானும் நிறைய உழைக்கிறோம்.

நாங்கள் ஒரு நல்ல நிலைமையில் இருந்து வாழ்ந்து காட்டினால் பெற்றோர் எங்களை ஏற்றுக்கொள்வார்கள் என கூறுகிறார். இந்த காலத்தில் ஆண்கள் நன்றாக சமைக்கிறார்கள். ஆனால் கணவர் ஹுசைனுக்கு எதுவும் தெரியாது. படப்பிடிப்பு, நகைச்சுவை நிகழ்ச்சி என வாழ்க்கை மிக அருமையாக செல்வதாக கூறும் மணிமேகலை சில சினிமா வாய்ப்புகளும் வருகிறது. தனக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லை என கூறும் மணிமேகலை வாழ்நாள் முழுவதும் தொகுப்பாளினியாக இருக்கவே விரும்புவதாக தெரிவித்துள்ளார்.