நடிகை நயன்தாராவுக்கு கொரோனா..!!? தீயாய் பரவும் தகவல்! உண்மை பின்னணி!

நடிகை நயன்தாராவுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவலை அவருடைய காதலர் மறுப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் நடிகை நயன்தாராவும் ஒருவர். தற்போது தன்னுடைய ரசிகர்களால் "லேடி சூப்பர்ஸ்டார்" என்று அன்புடன் அழைக்கப்பட்டு வருகிறார். கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திரை பிரபலங்களும் வீட்டினுள்ளேயே முடங்கியுள்ளனர்.

இந்நிலையில் திரைப்பிரபலங்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக சில நாட்களுக்கு முன்னர் நயன்தாரா மற்றும் அவருடைய காதலரான விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து நயன்தாரா செய்தி தொடர்பாளர் கூறும் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதாவது, நயன்தாரா இறுதியாக ஹைதராபாத்தில் நடைபெற்ற "அண்ணாத்த" படத்தின் படப்பிடிப்பு கலந்து கொண்டார். படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய பிறகு தன்னுடைய பாதுகாப்பதற்காகவும் சமூகத்தின் பாதுகாப்பிற்காகவும் தனிமையில் வசித்து வருகிறார். 

நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் நெட்பிளிக்ஸ் போஸட் பிரொடக்ஷன் தொடர்பான பணிகளையும் அலுவலுகத்திலிருந்தே கவனித்து வருகிறார். இருவருக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் வதந்தியே‌. இருவருமே முழு உடல் நலத்துடன் நன்றாகவுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையானது வெளியான பிறகே, அவருடைய கோடானுகோடி ரசிகர்களுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது என்று கூறினாள் அது மிகையாகாது.