காதலிப்பதாக கூறினார்..! முத்தம் கொடுத்தார்..! நித்யானந்தா லீலைகள்! வீடியோ வெளியிட்ட முன்னாள் சிஷ்யை!

நித்தியானந்தாவின் முன்னாள் பெண் சிஷ்யை மீண்டும் ஒரு குற்றச்சாட்டு வீடியோவாக பதிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கனடா நாட்டில் பிறந்தவர் சாரா லேண்டரி. இவர் அந்நாட்டிலிருந்து இந்தியாவில் உள்ள கர்நாடகா மாநிலத்திற்கு வந்தார். பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் தன்னை இணைத்துக்கொண்டு ருத்ரகன்னியாக மாறினார். மேலும் தன் பெயரை "ஸ்ரீ நித்தியா ஸ்வரூப்ப பிரியானந்தா" என்று மாற்றிக்கொண்டார்.

சில வாரங்களுக்கு முன்னால் நித்யானந்தாவுக்கு எதிராக வீடியோக்களை வெளியிட்டிருந்தார். ஒரு வழியாக தப்பித்து மீண்டும் தாயகம் திரும்புவதற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாக அந்த வீடியோவில் கூறியிருந்தார். மேலும் பிடதியில் இருக்கும் பெண் சிஷ்யர்கள் கடுமையான தொல்லைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்றும் கூறியிருந்தார்.

இதற்கு நித்யானந்தா தன் மீது புகாரளிக்கும் அனைவரும் ராட்சசன் மற்றும் ராட்சசி என்று பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது நாளுக்கு நாள் தன்னுடைய வேடங்களை மாற்றிக்கொண்டு நித்யானந்தா யூடியூபில் அருளுரை நிகழ்த்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் தானே பரமசிவன் என்றும், தான் இருக்கும் இடமே கைலாசம் என்றும் கூறிவருகிறார்.

தற்போது சாரா லேண்ட்ரி மீண்டும் வீடியோ மூலம் மற்றொரு குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார். அதாவது சதாசிவம் என்ற பெயரில் நித்யானந்தா தன்னை ஃபேஸ்புக்கில் அறிமுகப்படுத்தி கொண்டதாகவும், தன்னை காதலிப்பதாகவும் ஆசீர்வதிப்பது ஆகவும் கூறி முத்த மழைகளை புரிந்ததாக வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நித்தியானந்தா தன்னுடைய பெண் சிஷ்யைகளை தயார் செய்து வருகிறார். பிரியானந்தா என்ற பெண் சிஷ்யை பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு எந்தவித கொடுமைகளையும் தாங்கள் அனுபவிப்பதில்லை என்பது இந்த புகைப்படங்களை சான்றாகும் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

மேலும் நித்யானந்தா தன்னை எதிர்ப்பவர்களுக்கு எதிராக போர் புரிவதற்கு அனைவரும் தயாராகுங்கள். யாரும் இல்லை என்றால் நான் மட்டுமே தனியாளாக போரிடுவேன் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்விருவருக்கும் இடையே ஆன சமூக வலைத்தளப் போர் எப்போது நிறைவுக்கு வரும் என்று தெரியவில்லை.