நித்தி செல்போனில் பல பெண்களின் வீடியோ..! ரூ.4 கோடி செலவு செய்தார்! அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்!

நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறையில் இருந்த வீடியோ வெளியானதை அடுத்து நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நித்தியானந்தா மீது வெளிவராத நிறைய தகவல்கள் இருப்பதாக அவர் மீது புகார் அளித்துள்ள ஜனார்தன சர்மா தெரிவித்துள்ளார்.


திருவண்ணாமலையை சேர்ந்த நித்தியானந்தா மீது பாலியல் பலாத்காரம், கடத்தல் என பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில் தலைமறைவான அவரை போலிசார் தேடிக்கொண்டே இருக்கின்றார்கள். தன்னுடைய மகள்கள் 2 பேரும் நித்தியானந்தாவிடம் சிக்கித் தவிப்பதாகவும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளதாகவும் அவரது தந்தை ஜனார்தன சர்மா ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருந்தார்.

ஆனால் அடுத்த தினங்களில் அவருடைய குற்றச்சாட்டு பதில் அளிக்கும் வகையில், அவரது மகள்கள் ஒரு விடியோ வெளியிட்டனர். அதில் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்திருந்தனர். ஆனால் அப்படி கூறிய ஜனார்தன சர்மாவின் மகள்கள் தற்போது புதிய வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் தாங்கள் ஆபத்தில் இருப்பதாகவும், எங்கேயோ வந்து மாட்டிக்கொண்டோம் எனவும் தெரிவித்திருந்தனர்.

இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த தந்தை உடனடியாக குஜராத் நீதிமன்றத்தை நாடினார். தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி ஜனார்தன சர்மாவின் மகளை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.  இதுகுறித்து தற்போது பேசிய சர்மா ஆசிரமத்தில் ரஞ்சிதா மட்டும் அல்ல மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நித்தியானந்தா நடத்தும் குருகுலப் பள்ளியில் இருக்கும் பெண்களுடன் நித்தியானந்தா எப்போதுமே காமலீலையில் ஈடுபடுவது வழக்கம். மேலும் அவர் பல கொலைகளை செய்துள்ளார். மேலும் நித்தியாந்தனாவின் பாலிய வீடியோக்கள் அவருடைய செல்போன்களில் இருந்தனர். அதை அழிப்பதற்கே 4 கோடி ரூபாய்க்கு மேல் நித்தியானந்தா செலவு செய்திருப்பதாக சர்மா தெரிவித்தார்.