மீண்டும் ஒரு ரீமேக் படத்தில் அஜித்..! ஜாதிக் கொடுமைக்கு எதிரா குரல் கொடுக்கப் போறார் தல!

அஜித்குமார் தன்னுடைய 61-வது படத்தை இந்தி ரீமேக்கில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


அஜித்குமார் நடித்து சமீபத்தில் வெளிவந்த "நேர்கொண்ட பார்வை" திரைப்படமானது 'பிங்க்' எனப்படும் இந்தி திரைப்படத்தின் ரீமேக்காகும். இந்த திரைப்படத்தை பிரபல கதாநாயகியான மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்திருந்தார். இந்த படத்தை எச். வினோத் இயக்கினார்.

இந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் குமார் தன்னுடைய அடுத்த படத்திலும் வினோத்தின் இயக்கத்திலேயே நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான ஏற்பாடுகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இந்த திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக வலம் வரப்போகிறார். வழக்கம் போல சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலில் இல்லாமல் கருப்பு நிற ஹேர்ஸ்டைலிலுள்ளார்.

இந்த படத்தில் அவருக்கு பிடித்தமான பைக் பந்தயங்கள் மற்றும் கார் பந்தயங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் 61-வது திரைப்படத்தையும் ஹிந்தி ரீமேக்கில் அவர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

"ஆர்டிகல்-15" என்ற திரைப்படம் அஜித்குமாருக்கு மிகவும் பிடித்துள்ளது. இந்த படத்தில் அவர் நடிக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான துணை நடிகர்கள் மற்றும் நடிகைகள் தேர்வு அடுத்த மாதத்தில் நடைபெறவுள்ளது. 

அஜித் ரசிகர்கள் அவருடைய அடுத்த திரைப்படத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.